சவால்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுவே என் அசத்தலான பந்துவீச்சுக்கு காரணம் – ஆட்டநாயகன் ஷர்துல் பேட்டி

Shardul Thakur
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

எனக்கு சவால் என்றால் மிகவும் பிடிக்கும் : ஆட்டநாயகன் ஷர்துல் தாகூர்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 220 ரன்களை குவிக்க பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் 4 ஓவர்கள் பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்து 39 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஷர்துல் தாகூர் கூறியதாவது : நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தான் எனக்கு சவால்கள் என்றால் மிகவும் பிடிக்கும். கடினமான சூழலில் வந்து பந்துவீச நான் எப்போதும் விரும்புவேன். அதன்படியே நேற்று போல்ட், பும்ரா, பாண்டியா என அனைவரும் ஆரம்ப கட்ட ஓவர்களில் பந்துவீசி விக்கெட் வீழ்த்த நினைத்தனர்.

ஆனால் நேற்றைய போட்டியின் துவக்கத்தில் எங்களுக்கு விக்கெட் கிடைக்கவில்லை. அந்த சவாலான வேளையில் ஆறாவது ஓவரின் போது நான் வந்தேன். அப்போது சவாலான சூழ்நிலை இருந்தது அதுபோன்ற சூழல் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அந்த சூழ்நிலையில் சிறப்பாக பந்துவீசி விக்கெட் எடுத்ததில் மகிழ்ச்சி. மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை இது என்னுடைய சொந்த மைதானம்.

- Advertisement -

இதையும் படிங்க : குவிண்டன் டி காக்கை உட்காரவைத்து ரிக்கல்டனை விளையாட வைத்தது ஏன்? – பாண்டியா விளக்கம்

இங்கு நான் நெட் பவுலராக இருந்து தற்போது டீமில் இடம் பிடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளேன். அதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய சிறப்பான பந்துவீச்சு என்னுடைய சொந்த மைதானத்தில் வெளிப்படும் போது அது ஒரு அற்புதமான தருணம் எனவும் ஆட்டநாயகனான ஷர்துல் தாகூர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement