கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் விளையாடியிருந்த ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இந்த சீசனின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் கடந்து 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு 13 ஆண்டுகளாக தங்களது சீசனின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் சோகம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
ரயான் ரிக்கல்டனை தேர்வு செய்தது ஏன்? : பாண்டியா விளக்கம்
இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி மிக எளிதாக கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தியிருந்தது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 220 ரன்களை குவிக்க பின்னர் தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் சார்பாக துவக்க வீரர்கள் ரயான் ரிக்கல்டன் 81 ரன்களையும், ரோகித் சர்மா 78 ரன்களையும் குவித்து அசத்தினர். இப்படி முதல் விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் 148 ரன்களை குறிக்க மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வெற்றியை நோக்கி நகர்ந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது அனுபவ வீரரான குவிண்டன் டி காக் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தும் இளம் வீரரான ரியன் ரிக்கல்டனுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது? என்பது பலரது கேள்வியாகவும் இருந்தது.
ஏனெனில் ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை அனுபவம் மிகுந்த வீரராக பார்க்கப்படும் டி காக் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கீப்பராக முதல் தேர்வாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரையும் தாண்டி ரிக்கல்டன் இடம்பிடித்தார். இந்நிலையில் இப்படி இளம் வீரரான ரிக்கல்டன் இந்த போட்டியில் விளையாட என்ன காரணம்? என்பது குறித்து போட்டி முடிந்து பேசிய கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது :
இதையும் படிங்க : 220 ரன்கள் அடித்தும் நாங்கள் இந்த போட்டியில் தோற்க இதுவே காரணம் – அஜின்க்யா ரஹானே வருத்தம்
ரயான் ரிக்கல்டன் மும்பை அணிக்காக கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக விளையாடினார். குவிண்டன் டி காக் டாப் பேட்ஸ்மன் தான் இருந்தாலும் அவர் இதை புரிந்து கொள்வார். இளம் வீரரான ரிக்கல்டன் கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய வேளையில் இந்த ஆண்டும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அதன் காரணமாகவே நாங்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்தோம் அவரும் எங்களது நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் மிகச் சிறப்பாக விளையாடினார் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.



