இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கே.கே.ஆர் ஆகிய அணிகள் மோதிய வேளையில் இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது.
220 ரன்கள் அடித்தும் நாங்கள் தோற்க இதுவே காரணம் : அஜின்க்யா ரஹானே வருத்தம்
இந்த போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 220 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே கூறியதாவது :
இந்த போட்டியில் எனக்கு தசைப்பிடிப்பு அதிகமாக ஏற்பட்டது. ஆனாலும் தற்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். மும்பை ஆடுகளங்களில் இதுபோன்று தசைப்பிடிப்பு ஏற்படுவது இயல்புதான். அந்த சூழ்நிலையோடு விளையாடுவது சற்று கடினமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் 220 முதல் 225 ரன்கள் வரை அடித்தால் நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தோம். அந்த வகையிலேயே நாங்கள் மிகச் சிறப்பாக பேட்டிங்கும் செய்திருந்தோம்.
ஆனால் இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்திக்க அனுபவம் இல்லாத பந்துவீச்சு யூனிட் ஒரு காரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் போன்ற பலம் வாய்ந்த பேட்டிங் ஆர்டர் உள்ள அணிக்கு எதிராக இதுபோன்ற அனுபவமற்ற பந்துவீச்சாளர்களை வைத்திருந்தால் சரிவு ஏற்படும் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. வைபவ் அரோரா, கார்த்திக் தியாகி, முஸாபரனி ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் புதிய வீரர்கள்.
இதையும் படிங்க : இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்.. மிகப்பெரிய இலக்கை துரத்தியது குறித்து – ஹார்டிக் பாண்டியா மகிழ்ச்சி
எங்கள் அணியில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் ஆகிய இரண்டு அனுபவ சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தது. நிச்சயம் இந்த போட்டியில் இருந்து எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் நிறைய விடயத்தை கற்றுக் கொள்வார்கள். இந்த போட்டியில் கேமரூன் கிரீன் பந்து வீசவில்லை என்றாலும் விரைவில் அவர் பந்துவீச துவங்குவார் என அஜின்க்யா ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.



