இறுதி நேரத்தில் எனது சிறப்பான பேட்டிங்கிற்கு இதுவே காரணம் – ஷர்துல் தாகூர் பேட்டி

Thakur

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. ராகுல் மற்றும் தவான் ஆகியோர் அதிகபட்சமாக அரைசதம் அடித்தனர்.

rahul

அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி சார்பாக சைனி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்த போட்டியில் இறுதி நேரத்தில் பேட்டிங் இறங்கி ஷர்துல் தாகூர் சிறப்பாக விளையாடி 8 பந்துகளில் இரண்டு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 22 ரன்கள் குவித்து இந்திய அணியின் ரன் குவிப்புக்க உதவினார். மேலும் பந்துவீச்சிலும் இரண்டு விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்நிலையில் போட்டி முடிந்து அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது : என்னுடைய பேட்டிங்கில் நான் ரன் குவிக்க முடியும் என்று நம்புகிறேன். அதற்காக நான் பயிற்சியும் எடுத்து வருகிறேன்.

Thakur

8 ஆவது இடத்தில் இறங்கி என்னால் அணிக்கு ரன்களை முக்கியமான இடத்தில் சேர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன். நான் என்னை முழுவதுமாக சுதந்திரமாக உணர கேப்டன் கோலியும் அணி நிர்வாகமும் என்னை அனுமதிக்கின்றனர். மேலும் நான் பேட்டிங் இறங்குவதற்கு முன் மனதளவில் சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராகி கொள்வேன் அதனால் நான் மைதானத்திற்கு உள்ளே செல்லும்போது எந்த வித அழுத்தமும் உணர்வது கிடையாது. அந்த தெளிவான மனநிலையே எனது இந்த அதிரடியான பேட்டிங்க்கு காரணம் என்று தாகூர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -