நான் கடைசி ஓவரில் பதட்டமடைந்த போது ரோஹித் என்னிடம் வந்து கூறியவை இதுதான் – ஷர்து தாகூர் பேட்டி

Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான தொடரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 5வது போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் பிரமாதமாக வீசிய பந்து வீச்சு காரணம் என்றால் அது மிகை ஆகாது.

ind

- Advertisement -

ஏனெனில் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அவர் 4 ஓவர் வீசி 42 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக 17வது ஓவரை வீசிய அவர் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்டோக்ஸ் 46 ரன்களிலும், அதிரடி ஆட்டக்காரர் மற்றும் கேப்டன் இயான் மோர்கன் 4 ரன்களிலும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினார், இதன் காரணமாக இங்கிலாந்து அணி இக்கட்டில் ஆளானது.

மேலும் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய அவர் 20ஆவது ஓவரின் போது தனது பந்துவீச்சை தொடர்ந்து முதல் மூன்று பந்துகளில் 13 ரன்கள் கொடுத்தாலும் இறுதியில் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார். இருப்பினும் அவர் வீசிய இருபதாவது ஓவரின் 2-வது மற்றும் 3-வது பந்தில் பவுண்டரி மற்றும் சிக்ஸர் ஆகியவற்றை ஆர்ச்சர் அடிக்க அதன் பின்னர் ரசிகர்களுக்கு இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுமா ? என்ற பதற்றம் தொற்றியது.

Thakur

ஒருகட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசி 3 பந்துகளில் வெற்றி பெறுமா ? என்ற நிலை ஏற்பட்டது. மேலும் அவரும் மிகவும் பதட்டமாக காணப்பட்டார். அப்போது தற்காலிக கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா தனக்கு கொடுத்த அறிவுரை குறித்து தற்போது ஷர்துல் தாகூர் கூறுகையில் : 20ஆவது ஓவரின் போது முதல் மூன்று பந்துகளில் நான் ரன்களை அதிகம் கொடுத்தவுடன் சற்று படம் அடைந்தேன்.

- Advertisement -

அதன்பிறகு ரோகித் மற்றும் பாண்டியா ஆகியோர் என்னிடம் வந்து என்னை ஆசுவாசப் படுத்தினார். மேலும் பாண்டியா என்னிடம் வந்து சில திட்டங்களை வகுத்து கொடுத்தார். மேலும் சில அறிவுரைகளை தந்து பாண்டியா சில திட்டங்களை எனக்கு வகுத்துக் கொடுத்தார். ஆனால் ரோகித் என்னிடம் வந்து நீ என்ன நினைக்கிறாயோ ? அதன்படி பந்துவீசு.

thakur 1

இதேபோன்று மைதானத்தின் ஒரு சிறிய பகுதியை என்னிடம் காண்பித்து இது மைதானத்தின் சிறிய பகுதி என்றும் இந்த இடத்தில் மட்டும் பந்து வீச வேண்டாம் என்றும் நீ மற்றபடி நினைத்தவாறு இயல்பாக பந்து வீசு என ரோகித் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதன்படியே சிறப்பாக பந்துவீசிய நான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றேன் என்றும் தாகூர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement