இந்திய அணியில் துபே அதிரடி நீக்கம். காரணம் இதுதான் – கோலி அறிவிப்பு

Kohli

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் தற்போது துவங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. இந்திய அணியில் இருந்து ஷிவம் துபே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துள் தாகூர் இடம் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : இந்த மைதானம் கடுமையாகவும், தட்டையாகவும் இருக்கிறது. மைதானத்தின் இந்த தன்மை பேட்டிங் செய்ய நன்றாக இருக்கும். இருப்பினும் நாங்கள் முதலில் பந்துவீசவே விரும்பினோம் ஏனெனில் இந்த மைதானத்தில் நாங்கள் பலமுறை சேசிங்கில் சிறப்பாக செயல்பட்டு உள்ளோம். இருப்பினும் டாஸ் நமது கையில் இல்லை என்பதால் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.

Dube

மேலும் இந்த போட்டியில் ஒரே ஒரு மாற்றமாக துபே விளையாடவில்லை என்றும் அவருக்கு பதில் ஷர்துள் தாகூர் விளையாடுவதாகவும் அவர் கூறினார். ஏனெனில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ஒரு வேகப்பந்துவீச்சாளரை அதிகமாக கொண்டு செயல்பட்டால் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற காரணத்தினால் தாக்கூர் இடம்பெற்றதாக கோலி அறிவித்தார்.

- Advertisement -