என்னதான் 3 பேர் அரைசதம் அடித்தாலும் நேற்றைய போட்டியில் இவர் அடித்த 17 ரன்கள் தான் வெற்றிக்கு வித்திட்டது – விவரம் இதோ

Ind
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் அடித்தது. அதன்பின்னர் 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

Jadeja 1

- Advertisement -

இந்திய அணி 48.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணியின் வீரரான ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் முறையே 63 மற்றும் 77 ரன்கள் எடுத்து சிறப்பான துவக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து 122 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் விளையாட வந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 81 பந்துகளில் 85 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டுவந்து ஆட்டமிழந்து வெளியேறினார். மேலும் ஏற்கனவே ஐயர், பண்ட் மற்றும் ஜாதவ் என மிடில் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா வெற்றி பெறுமா ? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அப்போது சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜா ஒருபுறம் நிற்க மறுபுறம் வேகப்பந்து வீச்சாளர் தாகூர் களமிறங்கினார். கடைசி கட்டத்தில் பந்துகள் எண்ணிக்கையை விட வெற்றிக்கு தேவையான ரன்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தது.

Jadeja

ஆனால் தாகூர் இறுதி கட்டத்தில் 6 பந்துகளை சந்தித்து அதில் இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் எனப் பிரமாதப்படுத்தி 17 ரன்களை குவித்தார். அவர் அடித்த 17 ரன்கள் வெற்றிக்கான இலக்கை அடைய வழி செய்தது. மேலும் அனுபவம் மிக்க ஜடேஜா 31 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் அடிக்க இந்திய அணி 8 பந்துகள் மீதமிருக்க வெற்றியை பெற்றது. நேற்றைய போட்டியின் முக்கியமான நேரத்தில் தாகூர் 6 பந்துகளில் அடித்த இந்த 17 ரன்களே இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது என்றால் அதுமிகையல்ல.

Advertisement