என்னை நொறுக்க பாத்த ஹெட்டுக்கு இதை செஞ்சேன்.. ஜஹீர் தான் வரவச்சாரு.. இது நியாயமில்ல மாத்துங்க.. தாகூர் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2025 தொடரில் மார்ச் 27ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 7வது போட்டியில் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஹைதராபாத் 20 ஓவரில் 190-9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47, அன்கிட் வர்மா 36 ரன்கள் எடுத்த நிலையில் லக்னோவுக்கு அதிகபட்சமாக சர்துள் தாகூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய லக்னோ அணிக்கு நிக்கோலஸ் பூரான் ஹைதராபாத் பவுலர்களை அடித்து நொறுக்கி 70 (26) ரன்கள் குவித்தார். அவருடன் மிட்சேல் மார்ஷ் 52 (31), அப்துல் சமத் 22* (8) ரன்கள் அடித்து 16.1 ஓவரில் வெற்றி பெற வைத்தார்கள். அதனால் லக்னோ தங்களது முதல் வெற்றியைப் பெற்ற நிலையில் ஹைதெராபாத்துக்கு கேப்டன் கமின்ஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்து முதல் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

ஆட்டநாயகன் தாகூர்:

முன்னதாக கடந்தப் போட்டியில் 286 ரன்கள் அடித்த ஹைதராபாத் இப்போட்டியில் 300 ரன்கள் அடிக்கும் என்று நிறைய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆரம்பத்திலேயே அபிஷேக் சர்மா, இஷான் கிஷனை 6, 0 ரன்னில் காலி செய்த தாக்கூர் ஹைதராபாத்தை 200 ரன்கள் கூட தொடவிடாமல் லக்னோ வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதனால் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் ஊதா தொப்பியையும் தன்வசமாக்கி அசத்தியுள்ளார்.

இந்நிலையில் தம்மை அடித்து நொறுக்க பார்த்த டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மாவை ஆரம்பத்திலேயே தாம் பந்து வீச்சில் அட்டாக் செய்ததாக கூறும் தாகூர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஏலத்தில் வாங்கப்படாததால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று நினைக்கவில்லை. அதே சமயம் ஐபிஎல் தொடரில் விளையாடாமல் போனால் கவுண்ட்டி தொடரில் விளையாடுவதற்காக திட்டத்தை வகுத்திருந்தேன்”

- Advertisement -

இதெல்லாம் நியாயமில்ல:

“அதற்காக ரஞ்சிக்கோப்பையில் விளையாடிக் கொண்டிருந்த போது ஜஹீர் கான் (ஆலோசகர்) என்னை அழைத்து நீங்கள் மாற்று வீரராக வரவிருப்பதால் எதையும் மாற்றிக் கொள்ளாதீர்கள் என்று சொன்னார். அப்படி மாற்று வீரர் என்று அவர்கள் சொல்லும் போது உங்களுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் சகஜம். எனது திறனுக்கு ஆதரவு கொடுத்தேன்”

இதையும் படிங்க: 16.1 ஓவரில் 193 ரன்ஸ்.. 18 பந்தில் ஹைதராபாத்தை பொளந்த பூரான் மாஸ் வரலாற்று சாதனை.. லக்னோ வெற்றி

“ஹெட், அபிஷேக் எனக்கு எதிராக வாய்ப்பை எடுக்க விரும்பினார்கள். அதனால் அவர்களுக்கு எதிராக நானும் வாய்ப்பை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். புதிய பந்து ஸ்விங் ஆகும் போது விக்கெட்டுகள் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதை இன்று நிறைய பயன்படுத்தினேன். இது போன்ற போட்டிகள் பவுலர்களுக்கு குறைவாகவே கிடைக்கிறது. பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமநிலை வேண்டும் என்பதால் இது போன்ற பிட்ச் உருவாக்கப்பட வேண்டுமென கடந்த போட்டியிலேயே சொன்னேன். இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதால் 240 – 250 ரன்கள் அடிப்பது பவுலர்களுக்கு நியாயமற்றது” என்று கூறினார்.

Advertisement