ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 27ஆம் தேதி ஹைதராபாத் நகரில் இரவு 7.30 மணிக்கு ஏழாவது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஹைதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மாவை 6 ரன்னில் அவுட்டாக்கிய சர்துள் தாக்கூர் அடுத்ததாக வந்த இசான் கிசானை கோல்டன் டக் அவுட் செய்தார்.
அதனால் 15-2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஹைதராபாத் அணியை மறுபுறம் அதிரடியாக விளையாடி காப்பாற்ற முயற்சித்த ட்ராவிஸ் ஹெட் 47 (28) ரன்களில் பிரின்ஸ் யாதவ் வேகத்தில் போல்ட்டானார். அவருடன் சேர்ந்து நிதானமாக விளையாட முயற்சித்த நித்திஷ் ரெட்டி 32 (28) ரன்களில் ரவி பிஸ்னோய் சுழலில் போல்ட்டானார். அதே போல மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாட முயற்சித்த ஹென்றிச் க்ளாசன் 26 (17) ரன்னில் ரன் அவுட்டானார்.
பூரான் சரவெடி:
இளம் வீரர் அங்கித் வர்மா 5 சிக்சர்களை பறக்க விட்டு 36 (13) ரன்னில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் கேப்டன் கமின்ஸ் 18 (4), ஹர்ஷல் பட்டேல் 12* (11) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் ஹைதெராபாத் 190-9 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ அணிக்கு அதிகபட்சமாக சர்துள் தாக்கூர் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அடுத்ததாக களமிறங்கிய லக்னோவுக்கு ஐடன் மார்க்ரம் ஒரு ரன்னில் ஷமி வேகத்தில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த நிக்கோலஸ் பூரான் தம்முடைய ஸ்டைலில் ஆரம்பம் முதலே அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து மற்றொரு துவக்க வீரர் மிட்சேல் மார்ஷ் தனது பங்கிற்கு அதிரடி காட்டினார். அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் அமைத்த இந்த ஜோடி லக்னோவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது.
லக்னோ வெற்றி:
அப்போது 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 70 (26) ரன்னில் பூரானை அவுட்டாக்கிய பட் கமின்ஸ் மறுபுறம் அரை சதம் கடந்த மார்ஷை 52 (31) ரன்களில் அவுட்டாக்கி வெற்றிக்கு போராடினார். அடுத்ததாக வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 15, ஆயுஷ் படோனி 6 ரன்னில் அவுட்டானார்கள். அதற்கடுத்ததாக வந்த அப்துல் சமத் அதிரடியாக 22* (8) ரன்களும் டேவிட் மில்லர் 13* (8) ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிங்க: 190 ரன்ஸ்.. லார்ட் இஸ் பேக்.. காட்டடி ஹைதெராபாத்தை கட்டுப்படுத்திய லக்னோ.. தாக்கூர் சாதனையுடன் மாஸ் கம்பேக்
அதனால் 16.1 ஓவரில் 93-5 ரன்கள் எடுத்த லக்னோ 5 விக்கெட் வித்யாசத்தில் ஹைதராபாத்தை தோற்கடித்து தங்களது முதல் வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் நிக்கோலஸ் பூரான் 18 பந்தில் 50 ரன்கள் அடித்து 2025 ஐபிஎல் தொடரில் வேகமாக அரை சதம் அடித்த வீரராக சாதனை படைத்தார். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் 20க்கும் குறைவான பந்தில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற மாஸ் சாதனையையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. நிகோலஸ் பூரான்: 5*
2. ட்ராவிஸ் ஹெட்/கைரன் பொல்லார்ட்: தலா 4
3. ஜேக் பிரேசர்: 3



