- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எப்போவும் ஃபார்ம் அவுட்டாகாத டேஞ்சரான ரோஹித் ரஞ்சியில் என்கிட்ட சொன்னதை செஞ்சுட்டாரு.. தாக்கூர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீப காலங்களாக தடுமாற்றமாக விளையாடி வந்தார். குறிப்பாக கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் மோசமாக பேட்டிங் செய்தார். அதனால் கடைசிப் போட்டியில் விலகிய ரோகித் ஒரு தொடரின் பாதியில் தன்னைத்தானே நீக்கிக் கொண்ட முதல் இந்திய கேப்டன் என்ற பரிதாப சாதனை படைத்தார்.

அதன் காரணமாக விமர்சனங்களைச் சந்தித்த அவர் 12 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் மும்பைக்காக விளையாடும் அரை சதம் கூட அடிக்கவில்லை. இருப்பினும் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோகித் 119 ரன்கள் விளாசினார். அதனால் தன்னுடைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அவர் தன்னைச் சாம்பியன் வீரர் என்பதையும் நிரூபித்தார்.

- Advertisement -

ரோஹித் சர்மாவின் க்ளாஸ்:

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் அவர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு போட்டியில் பெரிய ஸ்கோர் வந்தால் தம்மால் மீண்டும் ஃபார்முக்கு வந்து விட முடியும் என்று ரஞ்சிக் கோப்பையில் தம்மிடம் சொன்னதை ரோகித் செய்து காண்பித்துள்ளதாக சர்துள் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“கட்டாக் போட்டியில் ரோகித் பேட்டிங் செய்த விதத்தில் அவர் ஒரு முறை கூட ஃபார்ம் அவுட்டாகவில்லை என்பது போல் தெரிந்தது. ஒரு சில பந்துகளில் அவுட்டாகலாம். அது வலைப்பயிற்சியில் அனைவருக்கும் நடக்கக் கூடியதாகும். அதைத் தவிர்த்து அவர் நன்றாகவே விளையாடினார். இவை அனைத்தும் அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததாகும்”

- Advertisement -

தாக்கூர் பாராட்டு:

“அது போன்ற சூழ்நிலையில் நீங்கள் அதிர்ஷ்டத்தை மட்டுமே குறை சொல்ல வேண்டும். ரோகித் அடித்த சிக்சர்களில் அவர் எந்தளவுக்கு ஆபத்தான பேட்ஸ்மேன் என்பதையும் பார்த்தோம். மற்ற வீரர்களைக் காட்டிலும் அவர் வித்தியாசமான கிளாஸ் கொண்டவர். ரஞ்சிக் கோப்பையில் நாங்கள் விளையாடிய போது அவர் ரன்கள் அடிக்கவில்லை. அதற்கு முன் ஆஸ்திரேலிய தொடரிலும் ரன்கள் அடிக்காததால் அது பற்றி அவரிடம் பேசினோம்”

இதையும் படிங்க: டேஞ்சரான இந்திய அணி எப்படியும் அதை நெருங்கிடுவாங்க.. 2000 மாதிரி நியூஸிலாந்து ஜெய்க்கணும்.. டிம் சௌதீ

“ஆனால் அப்போது ரன்கள் வரவில்லை என்பது எனக்குத் தெரியும். ஒரு இன்னிங்ஸ் சரியாக அமைந்தால் பின்னர் ரன்கள் தாமாக வரும் என்று ரோஹித் என்னிடம் சொன்னார். துவக்க வீரரான அவர் புதிய பந்தை எதிர்கொள்வதால் அது எப்போதும் கடினமாக இருக்கும். எனவே அவரை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஏனெனில் அவர் நீண்ட வருடங்களாக இந்தியாவுக்காக மூன்றாவது அணி கிரிக்கெட்டிலும் நிறைய போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்” என்று கூறினார்.

- Advertisement -