இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த ஷர்துல் தாகூர் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை 11 டெஸ்ட் போட்டிகள், 47 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டுக்கு பிறகு தனது பௌலிங் ஃபார்மை இழந்த அவரை இந்திய அணி இரண்டு ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. ஆனாலும் ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ந்து விளையாடி வந்தார்.
ஷர்துல் தாகூருக்கு கிடைக்கவிருக்கும் வாய்ப்பு :
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது கூட சிஎஸ்கே அணிக்காக விளையாடியிருந்த அவர் சுமாரான செயல்பாட்டையை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவரை நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டாமல் தவிர்த்தது.
இதன் காரணமாக இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரை தவறவிடுவார் என்பது உறுதியாகியிருந்தது. அதேவேளை ஷர்துல் தாகூரும் இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது ஐபிஎல் தொடரானது துவங்க சில தினங்களே இருக்கும் வேளையில் அவர் லக்னோ அணிக்காக மாற்றுவீரராக இணைய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் லக்னோ அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர்களான மாயங்க் யாதவ், ஆவேஷ் கான் மற்றும் மோசின் கான் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் மூவருமே தேசிய கிரிக்கெட் அகாடமியின் தகுதி சான்று பெற்றால் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாட முடியும்.
அதில் ஆவேஷ் கான் மற்றும் மோசின் கான் ஆகியோர் முழு உடற்தகுதியை எட்ட வாய்ப்பு இருப்பதாகவும் மாயங்க் யாதவ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை காயம் காரணமாக முற்றிலும் தவறு விடுவார் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கான மாற்று வீரரை தேடி வந்த லக்னோ அணி ஷர்துல் தாகூரை ஏற்கனவே தங்களது அணியில் இணைத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க : யார் பெஸ்ட்ன்னு அது பேசும்? இந்தியாவை குறைத்து பேசும் பாகிஸ்தானியர்களுக்கு.. பிரதமர் மோடி பதிலடி
மேலும் ஒருவேளை மாயங்க் யாதவ் பங்கேற்க முடியாமல் போகும் பட்சத்தில் அவர்கள் பி.சி.சி.ஐ-யின் அனுமதியோடு தாகூரை இணைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அதுவரை தொடர்ந்து ஷர்துல் தாகூர் லக்னா அணியுடன் பயிற்சியில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.



