ஃபைனலில் 111/6 என சரிந்த மும்பை.. 8 போர்ஸ் 3 சிக்ஸருடன் காப்பாற்றிய தாக்கூர்.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

Shardul Thakur 4
- Advertisement -

ரஞ்சிக் கோப்பை 2024 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மார்ச் 10ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட மும்பை மற்றும் விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு பிரிதிவி ஷா – பூப்பேன் லால்வாணி ஆகியோர் 81 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

இருப்பினும் அதில் லால்வாணி 37 ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவரிலேயே பிரிதிவி ஷா 46 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக வந்த முசீர் கான் 6, ஸ்ரேயாஸ் ஐயர் 7 என 2 ரன்களில் அவுட்டானார்கள். போதாக்குறைக்கு சுமாரான ஃபார்மில் இருக்கும் கேப்டன் ரஹானேவும் 7 ரன்களிலும் ஹர்டிக் தாமோர் 5 ரன்களிலும் நடையை கட்டினார்.

- Advertisement -

காப்பாற்றிய லார்ட் தாக்கூர்:
அதனால் 111/6 என சரிந்த மும்பை 200 ரன்கள் தாண்டுமா என்ற சந்தேகம் ஏற்பட்ட போது நட்சத்திர வீரர் சர்துள் தாக்கூர் களமிறங்கி அதிரடியாக விளையாடினார். குறிப்பாக தமிழகத்துக்கு எதிரான செமி ஃபைனலில் தனது கேரியரில் முதல் முறையாக சதமடித்து மும்பை ஃபைனல் வருவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

அதைப் பயன்படுத்தி இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடிய அவர் 37 பந்துகளில் அரை சதமடித்து 8 பவுண்டரி 3 சிக்சருடன் 75 (69) ரன்கள் குவித்து மும்பையை ஓரளவு காப்பாற்றி கடைசி விக்கெட்டாக அவுட்டானார். ஏற்கனவே தோனி தலைமையில் சென்னை அணியில் சிறப்பாக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக அசத்திய அவர் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் இந்த வருடம் மீண்டும் சென்னை அணியில் விளையாட தேர்வாகியுள்ள அவர் ஐபிஎல் துவங்குவதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அதுவும் அழுத்தமான ஃபைனலில் இப்படி அதிரடியாக விளையாடி ஃபார்முக்கு வந்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இறுதியில் அவருடன் விளையாடிய சம்ஸ் முலானி 13, தனுஷ் கோட்டியான் 8, துஷார் தேஷ்பாண்டே 14 ரன்கள் எடுத்ததால் ஓரளவு தப்பிய மும்பை 224 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: 41 வயசுலயும் அசத்தும் ஆண்டர்சனை பாருங்க.. உங்களாலும் முடியும்.. நட்சத்திர இந்திய வீரருக்கு மெக்ராத் அறிவுரை

விதர்பா சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 2, ஹர்ஷ் துபே 3, யாஷ் தாகூர் 3 கிரிக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய விதர்பா அணிக்கு துருவ் சோரேவை ஆரம்பத்திலேயே சர்துல் தாகூர் டக் அவுட்டாக்கினார். அடுத்து வந்த அமோன் மோகன்டே 8, கருண் நாயர் 0 ரன்களில் தவால் குல்கர்னி வேகத்தில் ஆட்டமிழந்தனர். அப்போது நிறைவுக்கு வந்த முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 31/3 ரன்கள் எடுத்துள்ள விதர்பா இன்னும் மும்பையை விட 193 ரன்கள் பின்தங்கிய நிலையில் தடுமாறி வருகிறது.

Advertisement