41 வயசுலயும் அசத்தும் ஆண்டர்சனை பாருங்க.. உங்களாலும் முடியும்.. நட்சத்திர இந்திய வீரருக்கு மெக்ராத் அறிவுரை

Glenn McGrath 2
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 4 – 1 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது. அதனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து தலைகுனிவுடன் நாடு திரும்பியது. இருப்பினும் இந்த தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பவுலிங் இங்கிலாந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது என்றே சொல்லலாம்.

குறிப்பாக உலகில் நிறைய வீரர்கள் 35 வயதுக்குள்ளையே 5 நாட்கள் நடைபெறும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்து டி20 போட்டிகளில் பணத்துக்காக விளையாட முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு முன்னோடியாக திகழும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 41 வயதிலும் தன்னுடைய உடலை சரியாக பராமரித்து அபாரமான ஃபிட்னஸ் பயன்படுத்தி டாப் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து வருகிறார்.

- Advertisement -

ஆண்டர்சன் போல:
அதிலும் தரம்சாலாவில் நடந்த கடைசி போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சளார் என்ற மாபெரும் உலக சாதனை படைத்து பலருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார். இந்நிலையில் ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் அடங்கிய இந்திய அணியின் தற்போதைய வேகப்பந்து வீச்சு கூட்டணி சிறப்பாக இருப்பதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளன் மெக்ராத் பாராட்டியுள்ளார்

அதில் 2023 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்த முகமது ஷமி குணமடைந்த பின் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பார்த்து உத்வேகத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் மெக்ராத் பேசியது பின்வருமாறு. “அடுத்த தலைமுறை எப்படி வருகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பும்ரா இன்னும் நிறைய விளையாட வேண்டும். ஷமி கொஞ்சம் வயதாகியுள்ளார்”

- Advertisement -

“சமீப காலங்களில் விளையாடும் சிராஜ் இன்னும் நிறைய விளையாட வேண்டும். எனவே இந்திய அணியின் தற்போதைய வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஷமி போன்றவர் காயத்தை சந்தித்துள்ளது மிகவும் கடினமாகும். இருப்பினும் அவரிடம் தேவையான அளவு அனுபவம் இருக்கிறது. நல்ல பவுலரான அவர் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். ஆனால் நீங்கள் வயதாகும் போது கடினமாக பயிற்சிகள் செய்து சிறப்பாக விளையாட உத்வேகம் தேவைப்படும்”

இதையும் படிங்க: ஜெய் ஷா மாதிரி ஒரு தலைவர் தான் நமக்கு தேவை.. புகழ்ந்த கெவின் பீட்டர்சன்.. காரணம் என்ன?

“அது போன்ற சமயத்தில் நீங்கள் 41 வயதிலும் 700 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்து இன்னும் நன்றாக பந்து வீசும் ஜேம்ஸ் ஆண்டர்சனை பார்க்க வேண்டும். அந்த வகையில் தயாரானால் உங்களால் எப்போதும் போட்டியின் மேலே இருக்க முடியும். வேகப்பந்து வீச்சாளர்கள் வயது அதிகரிக்கும் போது உடலளவில் கடினத்தை சந்திப்பார்கள். அது வேகமாக ஓடுவதில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

Advertisement