தோனி அடுத்த ஐ.பி.எல் தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? – ஷேன் வாட்சன் அளித்த பதில் இதோ

Watson
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் வரும் மார்ச் 31-ஆம் தேதி துவங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் விளையாட இருக்கிறது.

Hardik Pandya MS DHoni GT vs CSK

- Advertisement -

சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும் என்பதனால் இந்த தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை தோனியின் தலைமையிலான சென்னை அணி நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

அதேபோன்று வேறுயெந்த ஒரு அணியும் செய்யாத சாதனையாக சி.எஸ்.கே அணி பதினோரு 11 முறை ஐபிஎல் சீசன்களில் பிளேஆப் சுற்று வரை முன்னேறியுள்ளது. இப்படி சிஎஸ்கே அணியின் அசாத்தியமான செயல்பாடுகளுக்கு தல தோனி தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

Dhoni

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தோனி குறித்தும், சிஎஸ்கே அணி குறித்தும் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தோனியின் ஓய்வு குறித்து பேசிய அவர் கூறுகையில் : தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடர் என்று கேள்விப்பட்டேன்.

- Advertisement -

தோனியின் விளையாட்டை போலவே அவரும் ஒரு சிறந்த மனிதர். அவரது பிட்னஸ் தான் அவரை ஒரு நல்ல தலைவராக உருவாக்கியுள்ளது. சிஎஸ்கே அணி பெற்ற வெற்றிகளுக்கு ஒரு முக்கிய காரணம் என்றால் தோனி கேப்டனாக செயல்பட்டது தான். இன்றளவும் மிகச் சிறப்பான உடற்தகுதியுடன் இருக்கும் தோனி விரும்பினால் இன்னும் ஓரிரு ஆண்டுகள் விளையாடலாம். ஆனால் தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்துள்ளார் என்றே தெரிகிறது.

இதையும் படிங்க : கசந்தாலும் உண்மைய நேருக்கு நேரா அவர மாதிரி கேப்டன் ஐபிஎல் தொடரில் இருக்க முடியாது – ராபின் உத்தப்பா பாராட்டு

அதனால் இதுவே அவரது கடைசி தொடராக இருக்கும் என ஷேன் வாட்சன் கூறியது குறிப்பிடத்தக்கது. வாட்சன் கூறியது போன்றே சிஎஸ்கே அணி நிர்வாகமும் ஏற்கனவே இந்த ஆண்டு தோனி ஓய்வு பெற இருக்கிறார் என்றும் அவருக்கான வழியனுப்புதல் நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement