கசந்தாலும் உண்மைய நேருக்கு நேரா பேசும் அவர மாதிரி கேப்டன் ஐபிஎல் தொடரில் இருக்க முடியாது – ராபின் உத்தப்பா பாராட்டு

Uthappa
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை கடந்த வருடம் ஆரம்பத்திலேயே தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து 2020க்குப்பின் பிளே ஆஃப் கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதனால் பெரிய பின்னடையை சந்தித்த அந்த அணி 2021 போல் மிகச் சிறப்பாக செயல்பட்டு 5வது கோப்பையை வென்று கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

அதை விட இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று வரலாற்றின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனாக சாதனை படைத்து சர்வதேச கிரிக்கெட்டில் மகத்தான கேப்டனாக ஓய்வு பெற்ற எம்எஸ் தோனி 41 வயதை கடந்து விட்டதால் இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரிலும் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தனது கேரியரின் கடைசி போட்டி தல என்று தன்னை தலையில் வைத்து கொண்டாடும் தமிழக ரசிகர்களின் முன்னிலையில் சென்னை மண்ணில் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.

நேரா பேசிடுவாரு:
அதனால் 2019க்குப்பின் சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த வருட ஐபிஎல் தொடருடன் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் அவரை கொண்டாடுவதற்கு தமிழக ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் பொதுவாகவே அழுத்தமான தருணங்களிலும் பதறாமல் வித்தியாசமாக யோசித்து தனித்துவமான முடிவை எடுப்பதில் வல்லவரான தோனி தனது அணி வீரர்களிடம் கசப்பாக இருந்தாலும் மறைக்காமல் வெளிப்படையாக உண்மையை பேசுவார் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார். 2007 டி20 உலகக் கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் விளையாடிய அவர் 2021, 2022 சீசனில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியிலும் விளையாடினர்.

Dhoni

அந்த சமயங்களில் விளையாடும் 11 பேர் அணியில் இடம் பிடிப்பது குறித்து தம்மிடம் வெளிப்படையாக பேசிய தோனியின் பண்பை பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “மிகவும் எளிமையாக இருப்பது அவரிடம் அப்போது முதல் இப்போதும் இருக்கிறது. முதல் நாளில் நான் தோனியை சந்தித்த போது எவ்வாறு இருந்தாரோ இப்போதும் அவ்வாறே இருக்கிறார் அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உலகிலேயே மிகவும் சிக்கலற்ற நபர் தோனி. அவர் பொதுவாகவே வெளிப்படையாக பேசுவார். உங்களுக்கு வலித்தாலும் உண்மையை பேசுவதற்கு எப்போதும் தயங்க மாட்டார்”

- Advertisement -

“குறிப்பாக சென்னை அணிக்காக முதல் முறையாக நான் தேர்வு செய்யப்பட்ட போது எனக்கு போன் செய்த அவர் “இந்த சீசனுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியுமா என்பது எனக்கு தெரியாது. அதைப் பற்றி நான் இன்னும் யோசிக்காத நிலையில் ஒருவேளை நீங்கள் விளையாடினால் அதை உங்களிடம் தெரிவிப்பேன்” என்று நேரடியாக கூறினார். இப்போது வரை ஐபிஎல் தொடரில் 13 வருடங்கள் வெற்றிகரமாக விளையாடிய என்னிடம் வேறு எந்த கேப்டனும் அவ்வாறு தெரிவிக்காத நிலையில் அவர் எனது முகத்துக்கு நேராக தெரிவித்தார். அப்படி நேருக்கு நேராக அவர் தெரிவித்ததை நான் மிகவும் மதிக்கிறேன்”

uthappa

“அதை விட ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அவருடன் விளையாடிய சீசனில் சென்னை அணியில் இருந்த அனைவரும் அவரை மஹி பாய் என்று அழைத்தனர். அப்போது அவரிடம் சென்ற நான் நானும் அவ்வாறே உங்களை அழைக்க வேண்டுமா என்று கேட்டேன். அதை முற்றிலும் மறுத்த அவர் நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அவ்வாறு அழையுங்கள் என்று என்னிடம் தெரிவித்தார். குறிப்பாக மஹி என்றே அழையுங்கள் என என்னிடம் அவர் தெரிவித்தார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : ரசிகருக்கு ரோஜாப்பூ கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா – என்ன சொன்னார்னு தெரிஞ்சா சிரிப்பிங்க

அந்த வகையில் வெளிப்படையாக எளிமையான கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி தனது கடைசி சீசனில் கோப்பையை வென்று வெற்றியுடன் விடை பெறுவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement