விமானத்தில் பறக்கும்போது தான் தோனி யார் என்று தெரிந்தது – தோனி குறித்து மனம் திறந்த வாட்சன்

Watson
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த மூன்று வருடங்களாக விளையாடி வருகிறார். அதற்கு முன்னதாக எட்டு வருடங்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், இரண்டு வருடங்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விளையாடியுள்ளார்.

- Advertisement -

தான் விளையாடிய அணிகள் இடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் நல்ல முறையில் தன்னை பார்த்து கொண்டதாகவும் நல்ல முறையில் உபசரித்ததாகவும் தெரிவித்திருக்கிறார் ஷேன் வாட்சன். 39 வயதான ஷேன் வாட்சன் இந்த வருட ஐபிஎல் தொடரும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து வெளியேறினார். ஒரு வீடியோ மூலம் தனது ஓய்வை அறிவித்தார்.

2016 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வாட்சன், ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார் அந்த வீடியோவில் பேசிய ஷேன் வாட்சன் தோனியின் கேப்டன்ஷிப் திறமையைப் பற்றி வாய் நிறைய புகழ்ந்து பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

watson

நான் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானத்தில் அமர்ந்து இருந்தபோது தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படத்தை பார்த்தேன். இந்திய கிரிக்கெட் வட்டாரத்திலும் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களிடமும் அவர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று அந்த படத்தை பார்த்த பின்தான் புரிந்தது.

Watson

இப்படி சிறிய கிராமத்தில் இருந்து வந்த தோனி உலகம் வியக்கும் அளவில் கிரிக்கெட்டில் சாதித்தது இந்திய மக்களுக்கு குறிப்பாக கிராம மக்களுக்கு ஒரு பெரிய உற்சாகத்தை அளித்து இருக்கிறது என்று கூறியுள்ளார் ஷேன் வாட்சன்.

Advertisement