வார்னர் மட்டும் அந்த விஷயத்தை சேன்ஞ் பண்ணலனா நான் பதவியே வேணான்னு கிளம்பிடுவேன் – வாட்சன் கொதிப்பு

Watson-and-Warner
- Advertisement -

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த இந்திய அணியில் நட்சத்திர அதிரடி விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முற்றிலுமாக தவறவிட்டார். அதன் காரணமாக டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் அனுபவ ஆட்டக்காரரான டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டார். இப்படி டேவிட் வார்னர் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட முதல் நான்கு போட்டிகளிலும் அந்த அணி தோல்வியை சந்தித்துள்ளது தற்போது டெல்லி அணியின் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

MI vs DC IPL 2022

- Advertisement -

நடைபெற்று முடிந்த நான்கு ஆட்டத்தில் மூன்று அரைசதங்களை அவர் அடித்து இருந்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் எப்போதுமே அதிரடியில் அசத்தும் டேவிட் வார்னர் இந்த ஐபிஎல் தொடரில் 114 என்கிற மிகவும் மோசமான ஸ்ட்ரைக் ரேட்டிலேயே ரன்களை அடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 47 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 51 ரன்களை மட்டுமே அடித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதுமட்டுமின்றி இந்த சீசன் முழுவதுமாக தற்போது வரை நான்கு போட்டிகளில் அவர் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. இப்படி உலகின் மிகப்பெரிய அதிரடி ஆட்டக்காரராக பார்க்கப்படும் வார்னர் தனது பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Warner

இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடுத்தவர்களின் பட்டியலில் வார்னர் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் அந்த அணி தோல்வி அடைவதற்கு அவரே காரணம் என்ற பேச்சுக்களும் இருந்து வருகிறது. ஐபிஎல் தொடர்களில் 6000 ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்ற அவர் கேப்டனாகவும் 3000 ரன்களை அடித்துள்ளார்.

- Advertisement -

இப்படி சாதனைகள் இருந்தாலும் அவரது இந்த ஆட்டம் வேதனை அளிப்பதாக டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : வார்னர் பயம் இல்லாமல் விளையாட வேண்டும். கடந்த காலங்களில் சிக்சர், பவுண்டரி அடித்த பந்துகளை தற்போது வார்னர் தவறவிடுகிறார். சில பவுண்டரி அடிக்கும் எளிதான பந்துகளை கூட அவர் அடிக்க முயற்சி செய்யாமல் இருக்கிறார்.

இதையும் படிங்க : GT vs PBKS : பவர்பிளேவில் நாங்க அதை சரியா செஞ்சிட்டோம் அதுதான் இந்த வெற்றிக்கு காரணம் – சுப்மன் கில் பேட்டி

இவையெல்லாம் ஒரு டெக்னிக்கல் சைட் தான். அதனை சரிசெய்ய பயிற்சி எடுத்து வருகிறோம். ஒரு பயிற்சியாளராக அவருடைய ஆட்டத்தை மாற்ற வேண்டியது என்னுடைய பொறுப்பு. நிச்சயம் அவருடன் பணியாற்றி அந்த குறைகளை நீக்கி மீண்டும் அவரை அதிரடியாக விளையாட வைப்போம். ஒரு சில போட்டிகளில் அவர் நிச்சயம் அவரது குறைகளை நீக்கிவிடுவார் அது நடக்கவில்லை என்றால் நான் இங்கு இருந்து கிளம்பி விடுவேன் என்று ஷேன் வாட்சன் காட்டமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement