GT vs PBKS : பவர்பிளேவில் நாங்க அதை சரியா செஞ்சிட்டோம் அதுதான் இந்த வெற்றிக்கு காரணம் – சுப்மன் கில் பேட்டி

Gill
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 18-ஆவது லீக் போட்டியானது நேற்று மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், ஷிகார் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் குவித்தது.

GT vs PBKS

- Advertisement -

பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 19.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய சுப்மன் கில் 49 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 67 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்நிலையில் போட்டி முடிந்து தங்களது பெற்ற வெற்றி குறித்து பேசிய அவர் கூறுகையில் :

Gill 1

இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலாக இருந்தது. இந்த மைதானத்தில் பந்து பழையதானதும் சிக்ஸர் அடிக்க மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் மைதானம் மிகவும் பெரியது என்பதனால் நம்மால் பெரிய ஷாட்டுகளை விளையாட முடியாது. அதேபோன்று பந்தை சரியான இடைவெளியில் அடித்து ரன் ஓட வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

இந்த போட்டியை நான் வெற்றிகரமாக முடித்துக் கொடுக்காததில் வருத்தம் தான். நான் கண்டிப்பாக போட்டியை முடித்து கொடுத்திருக்க வேண்டும். அதேவேளையில் பஞ்சாப் அணிக்கு எதிராக திவாதியா நல்ல ரெக்கார்டை வைத்துள்ளார். இது போன்ற போட்டிகளை அவர் மிகச் சிறப்பாக முடித்துக் கொடுக்கிறார். இந்த போட்டியில் எங்களது திட்டம் எல்லாம் மிகவும் எளிது தான் நிறைய டாட் பால்களை விளையாடக்கூடாது என்றும் பவர்பிளேவில் நிறைய ரன்களை குறிக்க வேண்டும் என்று நினைத்தோம்.

இதையும் படிங்க : இளம் வயசு தாண்டிருச்சு இனிமேல் ஆக்சனை மாற்ற முடியாது – கம்பேக் கொடுக்க அதை செய்ங்க, பும்ராவுக்கு பிஷப் முக்கிய அட்வைஸ்

அந்த வகையில் இலக்கு பெரிதாக இல்லை என்றாலும் பவர்பிளேவில் நாங்கள் விரைவாக விளையாடி ரன்களை சேர்த்து விட்டோம். அதனால் இறுதிவரை போட்டியை எளிதாக கொண்டு வந்து வெற்றிகரமாக முடிக்க முடிந்தது என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement