இந்த போட்டி முடிஞ்சதும் இதுதான் சி.எஸ்.கே பாத்துக்கோங்க. அப்படின்னு தோனி என்கிட்ட சொன்னாரு – நெகிழ்ந்த வாட்சன்

Watson
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 12 முறை சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில் பதிமூன்றாவது சீசன் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நடத்தப்படாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

ipl

- Advertisement -

மேலும் இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்துள்ளது. மேலும் பயிற்சிக்காகவும் அனைவரும் தற்போது வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணியின் முன்னணி தொடக்க வீரரான ஷேன் வாட்சன் தான் சி.எஸ்.கே அணியில் பங்கேற்று விளையாடிய சிறந்த போட்டி குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள அந்த பேட்டியில் : சென்னை அணியின் மற்ற அணிகளை விட தனித்துவமானது என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் : சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான பங்கு யாதெனில் தோனியின் தலைமைத்துவம் மற்றும் ப்ளம்பிங் பயிற்சியும் தான் இவர்கள் இருக்கும் வரை சென்னை அணி சிறப்பாக செயல்படும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Fleming

அதுமட்டுமின்றி சென்னை வீரர்களின் மீது தோனி வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கும் கிடைத்திருப்பது ஓர் அதிர்ஷ்டம் என்று சொல்லவேண்டும். சென்னை அணியில் விளையாடிய போட்டிகளில் எல்லாமே எனக்கு பிடித்த போட்டிகள் தான் என்றாலும் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி சிறப்பான போட்டி என்றும் கூறுவேன்.

jadhav

ஏனெனில் தோல்வி அடைந்து விடுவோம் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பிராவோ தனியாளாக நின்று அணிக்கு வெற்றியை சேர்த்திருந்தார். மேலும் ஜாதவ் காயம் ஏற்பட்டு இருந்தும் கடைசியில் சிக்ஸ் அடித்து அந்தப் போட்டி முடித்ததும் இதுதான் சென்னை அணி என தோனியும் மைக்கேல் ஹஸியும் கூறியது இன்று வரை எனக்கு நினைவில் உள்ளது என்றும் வாட்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement