ஐ.பி.எல் அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்ற ஷேன் வாட்சன் – அதிகாரபூர்வ அறிவிப்பு (எந்த அணிக்கு தெரியுமா)

Watson
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும், ஐபிஎல் தொடரில் சென்னை சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஜாம்பவான் வீரரான ஷேன் வாட்சன் 2008 ஆம் ஆண்டு முதல் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை 145 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3874 ரன்களை அடித்துள்ளார். அதோடு ஐபிஎல் தொடரில் பல விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ள மிகச் சிறந்த ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் 2020 ஆம் ஆண்டு வரை சென்னை அணிக்காக விளையாடி இருந்தார்.

watson

- Advertisement -

அதன் பிறகு ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த அவர் மீண்டும் எப்போது ஐபிஎல் தொடரில் பணியாற்றுவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. 40 வயதான ஷேன் வாட்சன் 2 முறை ஐபிஎல் தொடரை கைப்பற்றிய சாம்பியன் அணியில் முக்கிய வீரராக இருந்துள்ளார்.

2008-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும், 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் போது முக்கிய அங்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது படு மோசமான தோல்வியை சிஎஸ்கே அணி சந்தித்த வேளையில் அந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்த ஷேன் வாட்சன் மீண்டும் எப்போது ஐபிஎல் தொடரில் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது டெல்லி கேப்பிடல் அணியின் பயிற்சியாளராக இருக்கும் பாண்டிங் தலைமையில் அந்த அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லி அணி இறுதிப் போட்டி வரை முன்னேற பாண்டிங்கின் பயிற்சி ஒரு முக்கிய காரணமாக பேசப்பட்டது. இந்நிலையில் டெல்லி அணியின் துணை பயிற்சியாளராக இருந்த முகமது கைஃப் அந்த பதவியில் இருந்து வெளியேறி உள்ளதால் தற்போது அவரது இடத்திற்கு வாட்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : INDvsSL : இந்திய நேரப்படி இந்திய இலங்கை போட்டிகள் எத்தனை மணிக்கு துவங்கும் – எந்த சேனலில் பார்க்கலாம்?

எனவே இந்த ஐபிஎல் தொடரில் அவர் டெல்லி அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் அகார்கரையும் டெல்லி பந்துவீச்சு பயிற்சியாளராக மாற்ற முயற்சித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் மீண்டும் வாட்சன் தற்போது ஐ.பி.எல் களத்திற்கு திரும்பியுள்ளது ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement