2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி தான் ஜெய்க்கும்.. ஆட்டநாயகனும் காரணமும் இதான்.. வாட்சன் கணிப்பு

Shane Watson
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் நீண்ட காலங்களாக தோல்விகளையும் கிண்டல்களையும் சந்தித்து வரும் ஆர்சிபி இம்முறை முதல் கோப்பையை முத்தமிடுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் 2025 கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தான் வெல்லும் என்று முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். மேலும் இறுதிப் போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வெல்வார் என்றும் அவர் கணித்துள்ளார். அதற்கான காரணங்கள் பற்றி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் வாட்சன் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பெங்களூரு வெல்லும்:

“ஐபிஎல் 2025 கோப்பையை வெல்லப்போவது ஆர்சிபி என்று நான் சிந்தித்து வருகிறேன். இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனாக சிறந்த வீரர் விராட் கோலி இருப்பார். அதற்கான காரணங்கள் இதோ. இந்த வருடம் தான் பெங்களூரு அணிக்கானது என்று நான் கருதுகிறேன். தொடரின் இறுதியில் அவர்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டது”

“ஆனால் பிளே ஆஃப் சுற்றில் விளையாட ஜோஸ் ஹேசல்வுட் வந்துள்ளார். எனவே இது தான் அவர்களுக்கான வருடம் என்று நான் உணர்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தன்னுடைய அற்புதமான கேரியரிலிருந்து விடை பெற்றார். அப்படிப்பட்ட அவருக்கு ஐபிஎல் வெற்றியும் சேர்ந்து வருகிறது என்று நினைக்கிறேன். பஞ்சாப், குஜராத், மும்பை ஆகிய அணிகளும் தோற்கடிப்பதற்கு கடினமாக இருப்பார்கள்”

- Advertisement -

வாட்சன் கணிப்பு:

“ஆர்சிபி அணிக்கு எதிராக நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடும் அணியாக மும்பை இருக்கும் என்று நம்புகிறேன். அவர்களிடம் எந்த பலவீனமும் இல்லை. ஆனால் அதையும் தாண்டி இது ஆர்சிபி கோப்பையை வெல்வதற்கான நேரம். அதற்கான அர்த்தம் என்ன என்பது நாம் அனைவரும் அறிவோம். ஒருவழியாக இது விராட் கோலி ஆர்சிபி அணிக்காக முதல் கோப்பையை வெல்லப் போகும் வருடம் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: யோசிக்காம பேசாதீங்க.. ஆர்.சி.பி அணியை விமர்சித்த வர்ணனையாளர்களை வெளுத்து வாங்கிய – ஏ.பி டிவில்லியர்ஸ்

அவர் கூறுவது போல 2008 முதல் பெங்களூரு எனும் ஒரே அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி இதுவரை கோப்பையை வென்றதில்லை. இம்முறை பெங்களூரு அணி வெளியூரில் நடைபெற்ற 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே வெளியூரில் நடைபெறும் இறுதிப் போட்டியிலும் பெங்களூரு கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement