எனக்கு இந்திய வாய்ப்பே போதும்.. பாகிஸ்தான் வாரியத்தின் 2024 டி20 உ.கோ கோரிக்கையை நிராகரித்த வாட்சன்?

Shane Watson
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 1996 சாம்பியன் பட்டத்தை வென்ற பாகிஸ்தான் சமீப காலங்களாக தடுமாறி வருகிறது. குறிப்பாக 2023 ஆசியக் கோப்பையில் ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய அந்த அணி இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளிடம் தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் நடையைக் கட்டியது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதனால் பாபர் அசாம் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஷான் மசூத் மற்றும் சாகின் அப்ரிடி ஆகியோர் பாகிஸ்தானின் புதிய டெஸ்ட் மற்றும் டி20 கேப்டனாக பொறுப்பேற்றனர். ஆனால் அவர்கள் தலைமையிலும் ஆஸ்திரேலிய மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் தோற்ற பாகிஸ்தான் அணி நியூசிலாந்து மண்ணில் 4 – 1 என்ற கணக்கில் டி20 தொடரில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

நிராகரித்த வாட்சன்:
அந்த சூழ்நிலையில் ஜூன் மாதம் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல உதவுவதற்காக ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் ஷேன் வாட்சனை டி20 மற்றும் ஒருநாள் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்க பாகிஸ்தான் வாரியம் அணுகியது. இருப்பினும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளருக்கான சம்பளம் மிகவும் குறைவாக இருந்ததால் அதற்கு ஷேன் வாட்சன் மறுப்பு தெரிவித்து விட்டார்.

அத்துடன் அதிக சம்பளம் கொடுத்தால் அந்த பதவிக்கு வருகிறேன் என்றும் ஷேன் வாட்சன் கூறியதாக பாகிஸ்தானில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதைத் தொடர்ந்து அவருடைய கோரிக்கையை ஏற்று சம்பளத்தை அதிகப்படுத்துவதற்கு பாகிஸ்தான் வாரியம் சம்மதம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வருமாறு அந்நாட்டு வாரியம் வைத்த கோரிக்கையை ஷேன் வாட்சன் நிராகரித்துள்ளதாக ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போ இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் விரைவில் துவங்கும் ஐபிஎல் 2024 தொடரில் வாட்சன் வெளிநாட்டு வர்ணனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அந்த வேலைக்கு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் வேலையை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுவதாக தெரிகிறது.

இதையும் படிங்க: மீண்டும் ஆரம்பிக்கும் இந்தியா.. பாகிஸ்தான் கனவை உடைக்கும் வேலை துவக்கம்? ஐசிசி தரப்பில் வெளியான தகவல்

அத்துடன் பாகிஸ்தானின் பிஎஸ்எல் தொடரில் கிளாடியேட்டர்ஸ் அணிக்காகவும் அமெரிக்காவின் மேஜர் லீக் தொடரில் சான் பிரான்சிஸ்கோ அணிக்காகவும் ஏற்கனவே வாட்சன் பயிற்சியாளராக உள்ளார். எனவே இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் வர்ணனை மற்றும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பயிற்சியாளர் வேலையை செய்வதற்கு ஷேன் வாட்சன் முடிவெடுத்துள்ளதார். அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் வேலையை வேண்டாம் என்று அவர் முடிவெடுத்துள்ளது அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

Advertisement