மீண்டும் ஆரம்பிக்கும் இந்தியா.. பாகிஸ்தான் கனவை உடைக்கும் வேலை துவக்கம்? ஐசிசி தரப்பில் வெளியான தகவல்

ICC IND vs PAK
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை நிறுத்தி விட்டன. அத்துடன் ஆசிய மற்றும் உலகக் கோப்பைகளிலும் நிறைய விவாதங்களுக்கு பின்பே இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் கடந்த 2023 ஆசியக் கோப்பை முழுவதுமாக பாகிஸ்தான் மண்ணில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் அங்கு பாதுகாப்புக்கு பிரச்சனை இருப்பதால் பாகிஸ்தான் செல்ல முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அதன் காரணமாக 2023 ஆசியக் கோப்பையில் இந்தியா விளையாடிய போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் மண்ணில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது.

- Advertisement -

வேலையை துவக்கிய இந்தியா:
இருப்பினும் அந்த தொடரிலும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதனால் இந்தியா தாங்கள் நாட்டுக்கு வந்து விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்ற மோசின் நக்வி சமீபத்தில் ஐசிசி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார். குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் நாங்கள் இந்தியாவுக்கு சென்று விளையாடியதால் இம்முறை அவர்கள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடுவதை உறுதி செய்யுமாறு ஐசிசி’யிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் ஒரு நாட்டின் அரசு தங்களுடைய அணி மற்றொரு நாட்டுக்கு சென்று விளையாட முடியாது என்று சொன்னால் அதை எதிர்த்து தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று ஐசிசி தெரிவித்துள்ளது. எனவே பாகிஸ்தானுக்கு சென்று 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா விளையாட முடியாது என்று சொன்னால் அதை தங்களால் தடுக்க முடியாது என ஐசிசி கூறியுள்ளது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத ஐசிசி உறுப்பினர் கூறியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒவ்வொரு நாட்டின் உறுப்பினர்களும் ஐசிசி வாரியத்தின் கூட்டங்களில் விவாதித்து தங்களுடைய கவலைகளை எழுப்பலாம். பின்னர் அது வாக்கெடுப்புக்கு செல்லும். ஆனால் ஒரு உறுப்பு நாட்டின் அரசாங்கம் அங்கே சென்று விளையாட முடியாது என்று வெளிப்படையாக சொன்னால் அதற்கு ஐசிசி மாற்று வழியை தேட வேண்டும். ஏனெனில் உறுப்பு நாட்டு அணிகள் தங்களுடைய அரசாங்கத்தின் கொள்கை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு எதிராக செல்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்பதே ஐசிசி’யின் நிலைப்பாடாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: நைட் 12.45 மணி வரை பிராக்டீஸ்.. கிரிக்கெட்டை சுவாசிக்கும் அவர் எதிரணிகளை தெறிக்க விடுவாரு.. உத்தப்பா கருத்து

இதன் காரணமாக 2023 ஆசியக் கோப்பையை போலவே இந்தியா விளையாடும் 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள துபாய், ஷார்ஷா மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பல வருடங்கள் கழித்து தங்களுடைய நாட்டில் ஐசிசி தொடரை முழுமையாக நடத்தும் பாகிஸ்தானின் கனவை சிதைப்பதற்கான வேலைகளை மீண்டும் இந்தியா துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement