
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் 4வது போட்டி இன்று கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறுகிறது. முன்னதாக இத்தொடரில் அபிஷேக் சர்மா முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறார்.
ஐபிஎல் தொடரில் டிராவிஸ் ஹெட்டுடன் சேர்ந்து ஹைதராபாத் அணிக்காக அதிரடியாக விளையாடிய அவருக்கு கடந்த வருடம் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் 170 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் அபிஷேக் சர்மா இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2025 ஆசியக் கோப்பையில் எதிரணிகளை அடித்து நொறுக்கிய அவர் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
அதனால் குறுகிய காலத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்த அபிஷேக் சர்மா ஐசிசி தரவரிசையில் அதிக ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற வீரராக உலக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் சவாலான ஆஸ்திரேலியவில் அவரால் அசத்த முடியுமா? என்ற கேள்வி காணப்பட்டது. அதற்கு இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் அதிக (112) ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அபிஷேக் சர்மா ஆஸ்திரேலியாவிலும் தம்மால் அசத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
குறிப்பாக 2வது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது ஆஸ்திரேலியாவை தனியாளாக அடித்த அபிஷேக் 68 (38) ரன்கள் குவித்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வந்த உடனேயே அசத்தும் அளவுக்கு அபிஷேக் சர்மாவிடம் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் தம்மை உட்படுத்திக் கொள்ளும் திறன் இருப்பதாக ஷேன் வாட்சன் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“அபிஷேக் ஷர்மாவின் ஆட்டத்தைப் பார்ப்பது விருந்தாக இருக்கிறது. அவரது ஆட்டம் நம்ப முடியாத அளவுக்கு நன்றாக இருக்கிறதல்லவா? பயமின்றி விளையாடும் அவர் தேவைப்படும் சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறமையைப் பெற்றுள்ளார். ஹைதராபாத் அணிக்கு வந்து வாய்ப்பைப் பெற்றது முதல் கடந்த 2 – 3 வருடங்களில் அவருடைய வளர்ச்சியை பார்ப்பது ஸ்பெஷலானது”
இதையும் படிங்க: அபிஷேக் பயமின்றி அடிக்க அவங்க தான் காரணம்.. எனக்கும் கேரி கிர்ஸ்டன் இதைத்தான் செஞ்சாரு.. யுவ்ராஜ்
“அங்கிருந்து வந்த அவர் தற்போது இப்படி வெடிக்கும் வகையில் விளையாடுகிறார். அவரிடம் அனைத்து விதமான சூழ்நிலைகளில் விளையாடுவதற்கு தேவையான கியர் இருக்கிறது. அவரிடம் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பந்து வீச்சாளர்களை அடிப்பதற்கு தேவையான ஷாட்டுகளும் இருக்கிறது” என்று கூறினார்.