- Advertisement -
இந்திய கிரிக்கெட்

திறமையானவங்க தான் ஆனா ஓட்டையும் இருக்கு.. இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பற்றி விவாதித்த வாட்சன், ஸ்டைரிஸ்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் போட்டியிட துவங்கியுள்ளன. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் மிகப்பெரிய லட்சியத்துடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணியைப் பொறுத்த வரை விராட் கோலி, சூரியகுமார் யாதவ், பும்ரா, ஜெய்ஸ்வால், குல்தீப், துபே என அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வீரர்களில் பெரும்பாலானவர்கள் ஐபிஎல் 2024 டி20 தொடரில் விளையாடி நல்ல ஃபார்மிலும் இருக்கின்றனர். இருப்பினும் வேகப்பந்துவீச்சு துறையில் பும்ராவை தவிர்த்து சிராஜ், அர்ஷ்தீப் ஆகியோர் கொஞ்சம் தடுமாற கூடியவர்களாக இருப்பது பின்னடைவை கொடுக்கிறது. மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளில் வில் ஜேக்ஸ், மொய்ன் அலி, மேக்ஸ்வெல், க்ரீன் ஆகிய பேட்ஸ்மேன்கள் தரமான பகுதி நேர பவுலர்களாக உள்ளனர்.

- Advertisement -

இந்தியாவின் வாய்ப்பு:
ஆனால் இந்திய அணியில் டாப் 5 பேட்ஸ்மேன்கள் யாருமே பந்து வீச மாட்டார்கள் என்பது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் திறமை இருந்தாலும் சில ஓட்டைகள் இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

“இந்திய அணியினர் தங்களுடைய ஃபார்மை கண்டறிந்தால் கண்டிப்பாக டாப் 4 அல்லது 5 அணிகளில் ஒன்றாக இருப்பார்கள். தென்னாபிரிக்காவும் நன்றாக வந்துள்ளதாக தெரிகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் உள்ள சூழ்நிலைகள் வெற்றியை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கலாம். இந்திய அணியில் ஏராளமான திறமை இருக்கிறது. ஆனால் அவர்களிடம் சில ஓட்டையும் இருக்கிறது”

- Advertisement -

“அவர்கள் சிறப்பாக ஃபீல்டிங் செய்வதில்லை. அவர்களுடைய அணியின் பேலன்ஸ் பிரச்சினையாக இருக்கலாம். சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் நன்றாகவே இருக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா துருப்புச் சீட்டாக இருக்கின்றன” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் பேசியது பின்வருமாறு. “டேவிட் வார்னர் சில போட்டிகளில் அசத்துவார். பொதுவாக டி20 உலகக் கோப்பைக்கு நல்ல ஃபார்மில் செல்வதை பற்றி அனைவரும் பேசுவார்கள்”

இதையும் படிங்க: டி20 உ.கோ 2024 : டிராவிஸ் ஹெட் கிடையாது.. இந்த இந்திய வீரர் தான் அதிக ரன்கள் அடிப்பாரு.. ஸ்மித் கணிப்பு

“ஆனால் மகத்தான வீரர்கள் சரியான நேரத்தில் வருவதற்கான வழியை கண்டறிவார்கள். ரோகித் சர்மா போன்றவர்களுக்கு எப்போது அசத்த வேண்டும் என்பது தெரியும். அதே போல ஆஸ்திரேலியாவை தாண்டி நான் செல்ல மாட்டேன். அவர்கள் தேவைப்படும் நேரத்தில் வெற்றியை நோக்கி வருவார்கள். அதே போல தேர்வு செய்யப்பட்டுள்ள அணியை வைத்து ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் இந்தியாவும் பெரிய அளவில் ஓடுவார்கள் என்பதில் கேள்வி வேண்டாம்” என்று கூறினார்.

- Advertisement -