கங்குலி தலைமையில் இருந்த இந்த விஷயம் கோலியின் தலைமையில் இல்லை – ஷேன் வார்ன் ஓபன்டாக்

Warne
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அயல் நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் இருமுறையும், அதற்கடுத்து இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.

ind vs eng

- Advertisement -

ஏற்கனவே டிராவிட் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் வெற்றி பெற்றதையடுத்து தற்போது உள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணியே அங்கு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே தற்போது இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கோலியின் தலைமையிலான இந்திய அணி வெளிநாட்டில் ஆதிக்கம் செலுத்துவதற்கான காரணத்தை தற்போது ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் இப்போதைய பேட்டிங் ஆர்டர் வலுவானதாக இல்லை.

கங்குலியின் தலைமையில் இருக்கும்போது டிராவிட், சச்சின், லட்சுமணன், ஷேவாக், கங்குலி என பேட்ஸ்மேன்கள் சர்வதேச பவுலர்களை பந்தாடினார்கள். ஆனால் அதே போன்ற பலமான பேட்டிங் வரிசை தற்போது இல்லை. விராத் கோலி உலகின் தலைசிறந்த வீரர் தான். இருப்பினும் அப்போது கங்குலி தலைமையில் இருந்த டாப்-5 வீரர்கள் மிகச்சிறப்பான பேட்ஸ்மேன்கள் ஆனால் இப்போதுள்ள வீரர்களில் ரோஹித், கோலி தவிர பின்வரிசையில் பண்ட் மட்டுமே சிறப்பாக விளையாடுகிறார்.

rohith 6

அதனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை கங்குலி அணியிலிருந்தது போன்ற தற்போது விராட் கோலியின் தலைமையில் இல்லை என்றே நான் கூறுவேன். இந்திய அணி அயல்நாட்டில் ஆதிக்கம் செலுத்த காரணம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தான். கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணி அயல்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த பந்துவீச்சாளர்களே பெரிய அளவு உதவுகின்றனர் என ஷேன் வார்ன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement