ப்ளீஸ் இவரை மட்டும் இந்திய அணிக்கு கேப்டனா போடாதீங்க. செட்டே ஆகாது – கெஞ்சிய ஷேன் வார்ன்

Warne
Advertisement

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த பதவியில் இருந்து திடீரென விலகியுள்ளது இந்திய கிரிக்கெட்டில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 68 போட்டிகளில் இந்தியாவிற்கு கேப்டன்ஷிப் செய்த அவர் 40 வெற்றிகளை பெற்று இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அத்துடன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அவர் தலைமையில் பல சரித்திர வெற்றி பெற்ற இந்தியா கடந்த 2019 ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய சரித்திரம் படைத்தது.

kohli

புதிய கேப்டன் யார்:
அத்துடன் கேப்டனாக பொறுப்பேற்ற 2014 ஆம் ஆண்டு 7வது இடத்தில் தத்தளித்த இந்தியாவை 2016 முதல் 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்தார். அவரைப்போல ஒரு நல்ல கேப்டன் திடீரென்று கிடைப்பது கடினம் என்றாலும் தற்போதைய நிலைமையில் “இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்” என்ற கேள்வி நிலவி வருகிறது.

- Advertisement -

இந்தியாவின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 34 வயது நிரம்பிய ரோஹித் சர்மாவுக்கு பதில் கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரை கேப்டனாக நியமிக்கலாம் என பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

pant 2

விக்கெட் கீப்பர் வேண்டாம்:
குறிப்பாக “இந்தியாவின் அதிரடி விக்கெட் கீப்பராக விளங்கும் இளம் வீரர் ரிஷப் பண்ட்டை இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக நியமிக்க வேண்டும்” என முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் ஒரு டெஸ்ட் அணிக்கு விக்கெட் கீப்பர் கேப்டனாக இருக்க கூடாது என ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

“கேப்டனாக இருக்க நிறைய வீரர்களும், நிறைய விருப்பங்களும் உள்ளதற்கு இந்தியா அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவின் கேப்டனாக செயல்பட தகுதியானவர். ஆனால் அதற்கு முன் அவர் ரோகித் தலைமையில் ஒரு சில வருடங்கள் துணை கேப்டனாக செயல்பட வேண்டும். ஒரு விக்கெட் கீப்பர் கேப்டனாக இருப்பதை நான் விரும்பவில்லை. எப்போதும் ஒரு விக்கெட் கீப்பர் ஒரு நல்ல துணை கேப்டனாக மட்டுமே இருப்பார்கள் என கருதுகிறேன்.

Bumrah

எனவே இந்த வகையில் அடுத்த கேப்டனை தேர்வு செய்ய இந்தியாவிற்கு நிறைய விருப்பங்கள் உள்ளன. கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி இல்லாத நேரத்தில் ரகானே அபாரமாக கேப்டன்ஷிப் செய்தார். ஆனால் தற்போது அவரின் பேட்டிங் மோசமாக மாறிவிட்டது. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். அவர் ரன்கள் குவித்தால் மட்டும் போதும்”

- Advertisement -

என தெரிவித்த ஷேன் வார்னே அஜிங்கிய ரஹானே நல்ல பார்மில் இருந்தால் அவரை கேப்டனாக நியமிக்கலாம். ஆனால் அவர் மோசமான பார்மல் இருப்பதால் அடுத்த சில வருடங்களுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என்றும் அதன்பின் ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவின் முழுநேர டெஸ்ட் கேப்டனாக செயல்பட தகுதியானவர் என்றும் அதுவரை அவர் துணை கேப்டனாக செயல்பட வேண்டுமென ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Pant-2

பண்ட் வேண்டாம்:
“தயவு செய்து ரிசப் பண்ட்டை கேப்டனாக மாற்றாதீர்கள். ஏனெனில் அவர் எனக்கு மிகவும் பிடித்த வீரர். அவரை அவர் போக்கிலேயே விளையாட விடுங்கள். ரிஷப் பண்ட் பற்றி நான் கூறவேண்டுமானால் “நம் அணியின் வெற்றிக்காக நாம் என்ன செய்ய வேண்டும்?” என்பதை அவர் தன்னைத் தானே கேட்டுக் கொண்டால் அவர் எப்போதும் சரியான வழியில் விளையாடுவார். அவர் எப்போதும் தமக்கே உரித்தான பாணியில் விளையாட வேண்டும். ஏனெனில் அவர் பார்ப்பதற்கு ஒரு மிகச்சிறந்த வீரர், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்”

- Advertisement -

என இது பற்றி மேலும் தெரிவித்த ஷேன் வார்னே ரிஷப் பண்ட் இயற்கையாகவே அதிரடியாக விளையாடிய கூடியவர் எனவும் அவருக்கு கேப்டன்ஷிப் சுமையை கொடுக்காமல் வழக்கம் போல சுதந்திரமாக விளையாட வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க : முதல் குழந்தை பிறந்ததை ட்விட்டர் வாயிலாக அறிவித்த யுவ்ராஜ் சிங் – என்ன குழந்தை தெரியுமா?

ரசிகர்கள் கேள்வி:
ஷேன் வார்னேவின் இந்த கருத்தை பார்த்த ரசிகர்கள் “அப்போது விக்கெட் கீப்பர்களாக இருந்து நல்ல கேப்டன்களாக பல வெற்றிகளை தேடி கொடுத்த தோனி யார், சங்கக்காரா யார்” என அப்படியே அவரிடம் சமூக வலைதளங்களில் பதில் கேள்வி கேட்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக இன்னும் ஒரு சில வாரங்களில் “ரோகித் சர்மா” நியமிக்கப்படுவார் என ஒரு செய்தி ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement