முதல் குழந்தை பிறந்ததை ட்விட்டர் வாயிலாக அறிவித்த யுவ்ராஜ் சிங் – என்ன குழந்தை தெரியுமா?

Yuvi
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கடந்த 2000-மாவது ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2017 ஆம் ஆண்டு வரை 304 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர ஐபிஎல் தொடரிலும் 132 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் திகழ்ந்த இவர் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை வென்ற அணியில் முக்கிய வீரராக இருந்து தொடர் நாயகன் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வை அறிவித்த அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி குருத்வாராவில் பாரம்பரிய முறைப்படி அவரது தோழி ஹேசல் கீச் என்பவரை மணந்த யுவராஜ் சிங்கிற்கு தற்போது முதல் குழந்தை பிறந்துள்ளது.

- Advertisement -

அதனை தனது சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்ட யுவ்ராஜ் அதில் குறிப்பிட்டதாவது : கடவுளின் அருளால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எங்களுக்காக பிராத்தனை செய்து கொண்ட ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எங்களுக்கு இந்த ஆசீர்வாதம் அளித்த கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். இந்த சிறிய குழந்தையை நாங்கள் வரவேற்கும் போது எங்கள் தனியுரிமையை நீங்கள் மதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய அளவில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது மட்டுன்றி உலகளவில் இருக்கும் அவரது ரசிகர்களும் யுவ்ராஜ் சிங்கிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னைக்கு நான் கேப்டனாகும் அளவுக்கு வந்திருக்கேன்னா அதுக்கு அவர்தான் காரணம் – பாண்டியா நெகிழ்ச்சி

2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இதுவே முதல் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த அறிவிப்பை கண்ட ரசிகர்கள் தற்போது யுவராஜ் சிங்கிற்கும் அவரது மனைவி ஹேசல் கீச்சிற்கும் சமூக வலைதளம் மூலமாக வாழ்த்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement