இன்னைக்கு நான் கேப்டனாகும் அளவுக்கு வந்திருக்கேன்னா அதுக்கு அவர்தான் காரணம் – பாண்டியா நெகிழ்ச்சி

Pandya-2
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள அகமதாபாத் அணியின் கேப்டனாக இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரசித் கான் மற்றும் இளம் இந்திய வீரர் சுப்மன் கில் ஆகியோரும் அந்த அணியில் இடம் பிடித்துள்ளார்கள். நவீன கிரிக்கெட்டில் இந்தியா கண்டெடுத்த தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக விளங்கும் ஹர்திக் பாண்டியா கடந்த சீசன்களில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக விளையாடி வந்தார்.

Pandya-1

தல தோனியின் வளர்ப்பு:
இனி வரும் சீசன்களில் தனது சொந்த ஊரான குஜராத் மாநிலம் அகமதாபாத் ஐபிஎல் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் காலடி வைத்த அவர் படிப்படியாக உயர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இன்று ஒரு ஐபிஎல் அணியின் கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளது உண்மையாகவே அவரின் அற்புதமான வளர்ச்சியை காட்டுகிறது.

- Advertisement -

இந்நிலையில் கிரிக்கெட்டில் தாம் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மிகவும் முக்கிய பங்காற்றி உள்ளார் என ஹர்திக் பாண்டியா வெளிப்படையாக கூறியுள்ளார்.

pandya 1

தல தான் காரணம்:
“நான் நிறைய பேரிடம் நிறைய பாடங்களை கற்றுள்ளேன், குறிப்பாக தோனியிடம். இந்திய அணிக்கு செல்லும்போது நான் சாதாரணவனாக இருந்தேன். இருப்பினும் என்னை என் போக்கிலேயே விட்டு அதில் நான் செய்யும் தவறுகளை வைத்து அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு முன்னேறும் வகையில் அவர் என்னை வளர்த்தார்” என கூறிய பாண்டியா கடந்த 2016 ஆம் ஆண்டு எம்எஸ் தோனி கோலி தலைமையில் முதல் முறையாக இந்திய கிரிக்கெட்டில் விளையாட துவங்கினார்.

- Advertisement -

தோனியின் ஆதரவு :
“இந்திய அணிக்கு நான் சென்றபோது எம்.எஸ் தோனி அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என நினைத்தேன். அந்த நேரத்தில் “நீ இப்படி பந்து வீச வேண்டும் அப்படி பந்து வீச வேண்டும்” என ஏன் அவர் நிறைய விசயங்களை என்னிடம் பேசுவதில்லை என நினைத்தேன். ஆனால் எனக்கு நானே பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும் அப்போதுதான் நீண்ட நாட்கள் விளையாட முடியும் என அவர் விரும்புவதை புரிந்து பின்புதான் கொண்டேன். எனது அறிமுகப்போட்டியில் முதல் ஓவரில் 22 – 24 ரன்களை வாரி வழங்கியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.

pandya

அப்போது “இந்தியாவுக்காக நான் விளையாடுவது இதுதான் கடைசி போட்டியாக இருக்கும்” என பயத்தில் நினைத்தேன். ஆனால் என்னை அவர் 2வது ஓவர் வீச அழைத்தபோது வேறு யாரையோ கூப்பிடுகிறார் என நினைத்தேன். பின்பு பந்துவீசிய எனது கிரிக்கெட் வாழ்வில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தது. “நமக்காக அங்கே நான் இருக்கிறேன் என தோனி நமக்கு எப்போதும் காட்ட மாட்டார். ஆனால் அவர் எப்போதும் நமக்கு பின்னே நமக்காக இருப்பார்” என்பதையே தோனியிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்”

- Advertisement -

என இது பற்றி மேலும் கூறிய ஹர்திக் பாண்டியா தனது அறிமுக போட்டியில் முதல் ஓவரில் மோசமாக பந்துவீசிய போதிலும் தொடர்ந்து தமக்கு தோனி வாய்ப்பளித்தார் என விசுவாசத்துடன் கூறியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடந்த அந்த அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவுடன் ஹர்திக் பாண்டியா அறிமுகமானார்.

தல தல தான்:
அந்த போட்டியில் முதல் ஓவரில் ரன்களை வாரி வழங்கிய அவர் அதன்பின் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். அந்த போட்டி மட்டுமல்லாது ஆரம்ப காலகட்டத்தில் எம்எஸ் தோனி தமக்கு நிறைய ஆதரவு கொடுத்ததாக ஹர்திக் பாண்டியா தற்போது பெருமையுடன் கூறியுள்ளார்.

- Advertisement -

தற்போது தனது பந்துவீச்சை முன்னேற்றுவதற்கு பயிற்சிகளை மேற்கொண்டு வரும் ஹர்திக் பாண்டியா வரும் ஐபிஎல் தொடரில் ஆல்-ரவுண்டராக விளையாட உள்ளதாகவும் அதன் வாயிலாக விரைவில் இந்திய அணியில் மீண்டும் விளையாடுவேன் என்ற நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த ஒரு டி20 உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியாவிடம் தோனி நம்பி கொடுத்ததும் அதில் ஹர்திக் பாண்டியா வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்ததும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

இதையும் படிங்க : இதெல்லாம் கொஞ்ச காலம் தான். யாரும் பயப்பட வேண்டாம் – இந்திய அணிக்கு ஆறுதல் சொன்ன ரவிசாஸ்திரி

ஏற்கனவே ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் என பல வீரர்களை உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக மாற்றிய பெருமையை பெற்றுள்ள தோனி தற்போது பாண்டியாவின் வளர்ச்சிக்கும் உதவியுள்ளதை பார்த்த ரசிகர்கள் “தல தல தான்” என மனதார பாராட்டி வருகிறார்கள்.

Advertisement