இதெல்லாம் கொஞ்ச காலம் தான். யாரும் பயப்பட வேண்டாம் – இந்திய அணிக்கு ஆறுதல் சொன்ன ரவிசாஸ்திரி

Shastri
- Advertisement -

தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணியானது முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்தது. அதனைத் தொடர்ந்து கே.எல் ராகுல் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி அந்த தொடரிலும் 3-0 என்ற கணக்கில் வாஷ் அவுட் ஆனது. இப்படி இந்திய அணியில் பலமான பல நட்சத்திர வீரர்கள் இருந்தும் அனுபவம் குறைந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி எளிதாக தோல்வியை சந்தித்தது பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kohli 1

- Advertisement -

ஏனெனில் தற்போதுள்ள தென்னாப்பிரிக்க அணியை கணக்கில் கொள்ளும் போது இந்திய அணி பல மடங்கு பலம் வாய்ந்தது. அப்படி இருந்தும் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்தது பலரது மத்தியிலும் மிகப்பெரிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி பெற்ற தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற முடியாது. பலம் குறைந்த தென் ஆப்பிரிக்க அணியிடம் தற்போது நாம் தோற்றதை குறித்து பயப்பட வேண்டாம். ஏனெனில் இப்படி தோல்வியையும் நாம் சந்திக்கும் சில காலம் வரும். ஆனால் இது ஒரு தற்காலிக காலகட்டம்தான். இதையெல்லாம் கடந்து நாம் பலமாக மீண்டு வருவோம். எந்த ஒரு அணிக்கு எதிராகவும் நாம் ஒரு தொடரை இழந்து விட்டால் விமர்சிக்க துவங்கி விடுவார்கள்.

ind

ஆனால் அதைப்பற்றி எல்லாம் யோசிக்க கூடாது. எப்போதுமே கிரிக்கெட்டில் வெற்றியும் தோல்வியும் கலந்துதான் வரும். அந்த வகையில் தற்போது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள இந்த சறுக்கல் இது ஒரு குறுகிய காலம்தான். நிச்சயம் நமது அணி மீண்டும் தோல்வியில் இருந்து திரும்பி வந்து வெற்றி பெறும். ஒரு தொடரில் தோற்றவுடன் இந்திய அணியை குறைத்து மதிப்பிடுவது தவறு.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த 2 இந்திய வீரர்களால் தான் பாகிஸ்தான் அணிக்கு பிரச்சனையை தரமுடியும் – முகமது ஹபீஸ் ஓபன்டாக்

நமது அணி கடந்த ஐந்து ஆண்டுகளாக நம்பர் ஒன் அணியாக திகழ்ந்த அணி. எனவே இதைப்பற்றி எல்லாம் இந்திய வீரர்கள் கவலை கொள்ளவே கூடாது. நிச்சயம் இந்திய அணி சிறப்பான நிலைக்கு திரும்பும் என்றும் இந்திய அணியால் இது சாத்தியமாகும் என்றும் ரவி சாஸ்திரி இந்திய வீரர்களுக்கு ஆறுதலாக தனது கருத்துகளை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement