இந்த 2 இந்திய வீரர்களால் தான் பாகிஸ்தான் அணிக்கு பிரச்சனையை தரமுடியும் – முகமது ஹபீஸ் ஓபன்டாக்

Hafeez
- Advertisement -

ஐசிசி நடத்தும் உலக கோப்பை போட்டிகளில் ஒருமுறை கூட பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது கிடையாது என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி முதல் முறையாக விழுத்திய பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதுமட்டுமின்றி அரை இறுதிப் போட்டி வரை சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்று டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

INDvsPAK

- Advertisement -

அதேபோன்று இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையிலும் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள ஒரு அணியாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு சிரமம் கொடுக்கப்போகும் 2 இந்திய வீரர்கள் குறித்து பாகிஸ்தானின் வீரர் முகமது ஹபீஸ் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : எப்போதுமே சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுப்பு அதிகமாக இருக்கும். அந்த வகையில் இரு அணிகள் எப்போது சந்தித்தாலும் அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இம்முறை எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரின் போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரால் பாகிஸ்தான் அணிக்கு பிரச்சனையை தரமுடியும் என்று நினைக்கிறேன்.

Rohith-1

ஏனெனில் அவர்கள் இருவருமே திறமை வாய்ந்த வீரர்கள். அவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஆட்டத்தின் போக்கையே அவர்களால் மாற்ற முடியும். இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களை நான் குறைத்துக் கூறவில்லை. இருப்பினும் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் சிறப்பாக விளையாடினால் மற்ற அணிகளால் தாங்க முடியாது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : லக்னோ அணியின் பெயர் வெளியிடப்பட்டதை அடுத்து சி.எஸ்.கே கொடுத்த ரியாக்சன் – என்னனு பாருங்க

தற்போது உள்ள இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாக இருந்தாலும் முடிவில் ஆர்டரில் இந்திய அணி சரிவை சந்தித்து வருகிறது. அதே வேளையில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி பாகிஸ்தான் அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமும் பலம் வாய்ந்ததாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement