லக்னோ அணியின் பெயர் வெளியிடப்பட்டதை அடுத்து சி.எஸ்.கே கொடுத்த ரியாக்சன் – என்னனு பாருங்க

Lucknow
- Advertisement -

இந்தியாவில் வரும் மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாதம் வரை 15-வது ஐபிஎல் சீசனானது நடைபெறும் என்று ஏற்கனவே பிசிசிஐயின் செயலாளர் ஜெய்ஷா அறிவித்திருந்தார். இந்நிலையில் அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலமும் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் சேர்ந்து அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டன.
அதில் லக்னோ அணியை RP குழுமம் சார்பாக சஞ்சீவ் கோயங்கா வாங்கியுள்ளார். அந்த லக்னோ அணிக்கு நேற்று முறைப்படி பெயரானது வெளியிடப்பட்டது. அதன்படி ஏற்கனவே இதே குழுமம் புனேவை தலைமையாகக் கொண்டு புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வைத்திருந்தனர்.

இதன் காரணமாக தற்போது லக்னோ அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என்ற பெயரை வைத்துள்ளனர். மேலும் ரசிகர்களிடம் ஓட்டு எடுக்கப்பட்டு அவர்களின் பெரிய ஆதரவோடு இந்த பெயரானது வைக்கப்பட்டது என அந்த அணியின் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணி லக்னோ அணியின் இந்த புதிய பெயர் அறிவிப்பு குறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பக்கா ரியாக்ஷனை வெளியிட்டு இருந்தது.

- Advertisement -

அதில் புனே அணியை ஞாபகப்படுத்தும் விதமாக லக்னோ அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என்ற பெயர் வைத்ததற்கு “சூப்பர் நேம் மச்சி” என்று சிஎஸ்கே தங்களது ட்விட்டர் பக்கத்தில் தங்களது ரியாக்ஷனை அளித்துள்ளது.

இதையும் படிங்க : கங்குலியும் கோலியும் இந்த விஷயத்துல ஒரு முடிவுக்கு வரனும். அதுதான் டீமுக்கு நல்லது – கபில்தேவ் அட்வைஸ்

சென்னை அணி தடை செய்யப்பட்டிருந்த போது புனே அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று மற்றொரு ஐபிஎல் அணியான ராஜஸ்தான் அணியும் லக்னோ அணியின் பெயரை நக்கலடிக்கும் விதமாக ஒரு ட்வீட்டை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement