கங்குலியும் கோலியும் இந்த விஷயத்துல ஒரு முடிவுக்கு வரனும். அதுதான் டீமுக்கு நல்லது – கபில்தேவ் அட்வைஸ்

kapil dev
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த பதவியில் இருந்து முழுமையாக விலகி தற்போது இந்திய அணியில் சாதாரண வீரராக விளையாடி வருகிறார். கடந்த 2019 க்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் அடிக்க முடியாமல் தவித்து வருவதால் இனி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தும் வண்ணம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த 3 – 4 மாதங்களில் விராட் கோலி மற்றும் அவரின் கேப்டன்ஷிப் ஆகியவற்றை சுற்றி நடந்த பல சலசலப்புகள் இந்திய கிரிக்கெட்டை சரிவுக்கு கொண்டு வந்துள்ளன என்று கூறலாம்.

Kohli

- Advertisement -

கங்குலி – கோலி மோதல்:
2017 முதல் 3 வகையான இந்திய கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி முதலில் பணிச்சுமையை குறைத்து பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக டி20 கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகினார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவேன் என தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்தியாவிற்கு ஒரு உலககோப்பையை கூட பெற்றுத்தரவில்லை என்ற காரணத்தால் அவரின் ஒருநாள் கேப்டன் பதவியை பிசிசிஐ பறித்தது. அந்த சமயத்தில் விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.

ஆனால் சவுரவ் கங்குலி தம்மிடம் அவ்வாறு எதுவும் கேட்கவில்லை என விராட்கோலி உண்மையை உடைத்தார். விராட் கோலியின் அந்த கருத்துக்கு “பதில் எதுவும் இல்லை நேரம் வரும்போது பிசிசிஐ பார்த்துக் கொள்ளும்” என சௌரவ் கங்குலி பின்னர் தெரிவித்திருந்தார். இதனால் சௌரவ் கங்குலி மற்றும் விராட் கோலி இடையே மோதல் ஏற்பட்டது உலகிற்கு அம்பலமானது.

- Advertisement -

முடிவுக்கு கொண்டு வாங்க:
அந்த வேளையில் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியை விராட் கோலி ராஜினாமா செய்தது அவருக்கும் – பிசிசிஐக்கும் இடையே மோதல் உள்ளதை உறுதி செய்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் நிலவும் இந்த மோதலை மனம் விட்டு பேசி முடிவுக்கு கொண்டுவருமாறு இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Ganguly

இது பற்றி வார நாளிதழில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “டி20 கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகிய போது அவரின் மனதில் பல கேள்விகள் இருந்து வெளிப்பட்டது. நாம் கேட்டதையும் படித்ததையும் வைத்து சொல்லவேண்டுமானால் யாரும் அவரை கேப்டனாக விலக கூறவில்லை. அவர் ஒரு மிகச் சிறந்த வீரர், அவரின் முடிவை மதிக்கிறோம். அவர்கள் ( கங்குலி – கோலி) இந்த பிரச்சனையை முடித்து கொள்ள வேண்டும். போனை கையில் எடுத்து மனம் விட்டு பேசி இந்தியா மற்றும் இந்திய அணியை தங்களுக்கு முன் நிறுத்திக்கொள்ள வேண்டும்”

- Advertisement -

என தெரிவித்துள்ள கபில்தேவ் கங்குலி மற்றும் கோலி ஆகியோரிடையே எந்த பிரச்சனையாக இருந்தாலும் எந்த கருத்து வேறுபாடுகளாக இருந்தாலும் அதை மனம் விட்டு பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் சொந்த விருப்பு வெறுப்புகளை தாண்டி எப்போதும் இந்தியா மற்றும் இந்திய கிரிக்கெட்டை தலைநிமிரச் செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Ganguly-1

நாடுதான் முக்கியம்:
“ஆரம்பத்தில் தேவையான அனைத்தும் எனக்கு கிடைத்தது. ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு தேவையானவை கிடைக்கவில்லை. இருப்பினும் அதற்காக கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என அர்த்தமில்லை. ஆனால் அதற்காக அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினால் அதற்கு என்ன கூறுவதென்றே எனக்கு தெரியவில்லை. அவர் ஒரு மிகச் சிறந்த வீரர். எனவே அவர் தனது பேட்டிங்கில் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி ரன்களை குவிப்பதை பார்க்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க : இந்திய பந்துவீச்சாளரான இவரால் 1000 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் – ஷேன் வார்னே நம்பிக்கை

என இது பற்றி மேலும் தெரிவித்துள்ள கபில் தேவ் எப்போதும் நாம் நினைத்தது நடக்காது ஆனால் நாம் நினைத்தது நடக்கவில்லையே என்பதற்காக கேப்டன் பொறுப்பிலிருந்து விலக கூடாது என கூறினார். அத்துடன் இனி சாதாரண வீரராக விளையாடப் போகும் விராட் கோலி ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்காக பாடுபட உள்ளதை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Advertisement