இந்திய பந்துவீச்சாளரான இவரால் 1000 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் – ஷேன் வார்னே நம்பிக்கை

Warne
- Advertisement -

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களின் பட்டியலில் இலங்கை அணியை சேர்ந்த முரளிதரன் 800 விக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்திலும், அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் 708 விக்கெட்டுகள் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 640 விக்கெட்டுகள் உடன் 3-வது இடத்தில் உள்ளார். மேலும் மற்றொரு இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 537 விக்கெட்டுகள் உடன் 6-வது இடத்தில் உள்ளார்.

warne 1

- Advertisement -

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரன் மற்றும் என்னுடைய சாதனையை இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் முறியடித்து 1000 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய விக்கெட்டுகள் எடுப்பது கடினமான ஒன்று என்றாலும் சுழற்பந்து வீச்சாளர்களால் இது சாத்தியப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர்களில் அஷ்வின் 84 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 430 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோன்று நாதன் லயன் 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 415 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இந்நிலையில் அஷ்வின் குறித்து பேசியுள்ள ஷேன் வார்ன் கூறுகையில் : தற்போது விளையாடும் வீரர்களில் அஷ்வின் மற்றும் லயன் ஆகிய இருவர் மட்டுமே 1000 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என நம்புகிறேன்.

Ashwin

ஏனெனில் இருவருமே அட்டகாசமான சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசுவதை பார்க்கமுடிகிறது. அஷ்வினும், லயனும் டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் விக்கெட்டுகள் எடுப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படி நடந்தால் அது நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : வெங்கடேஷ் ஐயர் இந்த விஷயத்துக்கு சரிப்பட்டு வரமாட்டார். அவரை டீம்ல இருந்து தூக்குங்க – கம்பீர் வெளிப்படை

சர்வதேச கிரிக்கெட்டில் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய வீரர்களாக முரளிதரன் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோர் மட்டுமே இருக்கின்றனர். முரளிதரன் 583 இன்னிங்ஸ்களில் விளையாடி 1347 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேபோன்று ஷேன் வார்ன் 466 இன்னிங்ஸ்களில் விளையாடி 1001 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement