வெங்கடேஷ் ஐயர் இந்த விஷயத்துக்கு சரிப்பட்டு வரமாட்டார். அவரை டீம்ல இருந்து தூக்குங்க – கம்பீர் வெளிப்படை

Gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 3 க்கு 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் இடம்பெற்று விளையாடி இருந்தார். கடந்த ஐபிஎல் தொடரின்போது இரண்டாவது பாதியில் கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டி வரை முன்னேறியதற்கு முக்கிய காரணமாக வெங்கடேஷ் ஐயர் திகழ்ந்தார். ஏனெனில் துவக்க வீரராக களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்யும் அவர் பந்து வீச்சிலும் தன்னை நிரூபித்து இருந்தார்.

Venkatesh

- Advertisement -

இதன் காரணமாக தற்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலாக மாற்று வீரராக வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியில் ஆல் ரவுண்டராக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரை அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்த அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததால் தெ.ஆ அணிக்கெதிரான இந்த ஒருநாள் அணியிலும் இடம் கிடைத்தது.

ஆனால் இந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் பேட்டிங்கில் 24 ரன்களை மட்டுமே அடித்தார். பந்துவீச்சிலும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. இதன் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் வெங்கடேஷ் ஐயர் ஒருநாள் போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் காட்டமான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

venkatesh

ஐபிஎல் தொடரில் விளையாடியதை மட்டும் கணக்கில் வைத்து வெங்கடேஷ் ஐயரை ஒருநாள் அணியில் இணைத்தது தவறான ஒன்று. ஏனெனில் அவர் இன்னும் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு முதிர்ச்சி அடையவில்லை. 7 முதல் 8 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவரை சர்வதேச போட்டிகளில் விளையாட வைப்பது மிகவும் தவறு. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதால் டி20 கிரிக்கெட்டில் அவரை விளையாட வைக்க யோசிக்கலாம். ஆனால் ஒருநாள் போட்டி என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவம்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.சி.சி தொடர்களில் இந்தியா தொடர்ந்து தோல்வியடைய இதுவே காரணம் – சுனில் கவாஸ்கர் விளக்கம்

எனவே அவரை ஒருநாள் அணியில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார். மேலும் ஐ.பி.எல் தொடரில் அவர் துவக்க வீரராக களமிறங்கிய அதிரடியாக விளையாடுவதால் அவரை டி20 கிரிக்கெட்டில் ஓப்பனராக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரை அவருக்கு விளையாடும் அளவிற்கு பக்குவம் மற்றும் முதிர்ச்சி அடையவில்லை என்றும் கம்பீர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement