ஐ.சி.சி தொடர்களில் இந்தியா தொடர்ந்து தோல்வியடைய இதுவே காரணம் – சுனில் கவாஸ்கர் விளக்கம்

Gavaskar
Advertisement

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு மகத்தான திறமை கொண்ட முக்கிய அணியாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் பல தரமான கிரிக்கெட் வீரர்கள் உருவாகி வருவதால் சீனியர் அணியில் ஒரு சில போட்டிகளில் யாராவது சொதப்பினாலும் கூட உடனே அந்த இடத்தை நிரப்ப பென்சில் பல இளம் வீரர்கள் காத்திருக்கிறார்கள். சொல்லப்போனால் ஒரே நேரத்தில் 2 அணிகள் விளையாடும் அளவுக்கு இந்தியாவில் ஏகப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு திறமை கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை சமீப காலங்களாக அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது.

ind

உலககோப்பை இல்லயே:
அத்துடன் சமீப காலங்களாக வெளிநாடுகளிலும் கூட பை லேட்டரல் கிரிக்கெட் தொடர்களில் எதிரணிகளை அதன் சொந்த மண்ணில் இந்தியா தெறிக்க விடுகிறது. ஆனால் கடந்த பல வருடங்களாக ஐசிசி நடத்தும் உலககோப்பை தொடர்களில் ஒரு உலக கோப்பையை கூட வெல்ல முடியாமல் இந்தியா திண்டாடி வருகிறது.

- Advertisement -

கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா அதன்பின் கடந்த 8 வருடங்களாக ஒரு உலக கோப்பையை கூட வெல்ல முடியாமல் திணறி வருகிறது.

pandya

கனவாகவே போகும் உலககோப்பை:
2014இல் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2015 உலக கோப்பை அரைஇறுதிப் போட்டி, 2016 டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டி, 2017 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதி போட்டி, 2019 உலககோப்பை அரையிறுதி போட்டி என நாக் அவுட் போட்டிகளில் தோல்வியடைந்து வந்த இந்தியா கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் ஒரு படி மேலே சென்று நாக் அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது.

- Advertisement -

வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தான் அப்படி என்று பார்த்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்திடம் மண்ணை கவ்விய இந்தியா படுதோல்வியடைந்தது. விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட பல உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தபோதிலும் இப்படி உலக கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா தவித்து வருவது இந்திய ரசிகர்களுக்கு தீராத வேதனையாக இருந்து வருகிறது.

IND

காரணம் என்ன :
இந்நிலையில் கடந்த பல வருடங்களாக இந்தியா ஒரு உலக கோப்பையை ஏன் வெல்ல முடியாமல் என்ற காரணத்தை இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது பற்றி அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “ஐசிசி தொடர்களில் இந்தியா தோல்வியடைவதற்கு ஒரே ஒரு காரணம் தான் உள்ளது. 1985 அல்லது 2011 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியை பாருங்கள்,

- Advertisement -

1985இல் உலக சாம்பியன்ஷிப் தொடரை வென்ற இந்திய அணியை பாருங்கள். அந்த இந்திய அணிகளில் பல அபாரமான ஆல்ரவுண்டர் இருந்தார்கள். அதில் பல பேட்டர்கள் பந்து வீசுபவர்களாக இருந்தனர், பல பவுலர்கள் பேட்டிங் செய்பவர்களாக இருந்தனர். 6, 7, 8 ஆகிய இடங்களில் இருந்த வீரர்கள் பேட்டிங் செய்யக்கூடியவர்களாக அந்த அணிகளில் இருந்தார்கள். யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே சிறப்பாக செய்வார்கள்”

YuvrajSingh

என தெரிவித்துள்ள கவாஸ்கர் தற்போதைய இந்திய அணியில் தரமான ஆல்ரவுண்டர்கள் இல்லாத காரணத்தினாலேயே இந்தியா ஒரு உலககோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கிறது என உண்மையை கூறியுள்ளார். அவர் கூறியது போல 1985 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்தியா உலக கோப்பையை வென்ற அணியில் கபில்தேவ், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற ஆல் ரவுண்டர்கள் இருந்ததால் இந்தியாவால் கோப்பையை வெல்ல முடிந்தது.

இதையும் படிங்க : அவர் மட்டும் எத்தனை உலகக்கோப்பை ஜெயிச்சி கொடுத்தாரு. கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரவிசாஸ்திரி

கேப்டன் என்ன செய்வார்:
“கடந்த 2 – 3 வருடங்களாக இந்திய அணியில் இந்த பிரச்சனை தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுபவர்களுக்கு தேவையான வீரர்கள் இல்லாததால் பிரச்சனை ஏற்படுகிறது” என இது பற்றி மேலும் தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் ஒரு அணியில் நல்ல தரமான ஆல்ரவுண்டர்கள் இல்லை என்றால் அதன் கேப்டன் எவ்வளவு பெரிய அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும் கூட கோப்பையை வெல்வது கடினம் என கூறியுள்ளார்.

Advertisement