அவர் மட்டும் எத்தனை உலகக்கோப்பை ஜெயிச்சி கொடுத்தாரு. கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரவிசாஸ்திரி

shastri
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதனைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தான் கேப்டனாக செயல்படுவேன் என்று அறிவித்து இருந்த வேளையில் ஒருநாள் கேப்டன் பதவியை பிசிசிஐ அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கியது. அதனைத்தொடர்ந்து அதன் காரணமாக ஏற்பட்ட விரக்தியினால் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி தனது கேப்டன் பதவியிலிருந்து வெளியேறினார். தற்போது மூன்று வகையான கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவியை துறந்த விராட் கோலியின் முழுநேர பேட்ஸ்மேனாக இந்திய அணிக்கு விளையாடி வருகிறார்.

Kohli-1

- Advertisement -

பிசிசிஐ மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே விராட்கோலி இப்படி ஒரு முடிவை எடுத்ததாகவும் சில தகவல்கள் வெளியாகி இருந்தது. விராட் கோலியின் மீதுள்ள ஒரு குறையாக அவரால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது மட்டுமே இருந்தது. இந்நிலையில் தற்போது விராட் கோலிக்கு ஆதரவாக அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ஐசிசி கோப்பையை வெல்வதுதான் ஒரு வெற்றிகரமான கேப்டனுக்கு அளவுகோல் என்றால் கங்குலி எத்தனை ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் விராட் கோலி பதவி விலகியது குறித்து பலரும் பலவிதமாக பேசும் வேளையில் இதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ஏழு ஆண்டுகள் இந்திய அணிக்காக பயிற்சியாளராக இருந்து விட்டு இப்போது தான் அணியில் இருந்து வெளியேறி உள்ளேன். எப்போதுமே இந்திய அணி குறித்து நான் எங்கும் விவாதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Kohli

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஐசிசி கோப்பையை வென்றால் மட்டும்தான் சிறந்த கேப்டன் என்றால் கபில் தேவ் மற்றும் தோனி ஆகியவை தவிர வேற யாரும் சிறந்த கேப்டன் இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கவாஸ்கர், அணில் கும்ப்ளே, சச்சின், டிராவிட் போன்ற பல கேப்டன்கள் இந்திய அணிக்காக கேப்டனாக செயல்பட்டு உள்ளனர். அவர்களால் கூட ஐ.சி.சி கோப்பையை வெல்ல முடியவில்லை.

- Advertisement -

அதுமட்டுமின்றி சச்சின் டெண்டுல்கரே 6 உலக கோப்பை தொடர்களில் விளையாடிய பிறகு தான் கடைசியாக உலக கோப்பையை வென்ற அணியில் இருந்தார் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். எனவே உலக கோப்பையை வெல்வது ஒரு அளவுகோல் கிடையாது. கேப்டனாக முழுப் பங்களிப்பை அளித்து வெற்றிக்காக போராட வேண்டும் என்பதுதான் ஒரு கேப்டன் உடைய முக்கியமான செயல்.

இதையும் படிங்க : தோனி இல்லாததால் தான் அவங்க 2 பேரும் டீம்ல இருந்தே காணாம போய்ட்டாங்க புட்டு புட்டு வைத்த – தினேஷ் கார்த்திக்

என்னை பொருத்தவரை என்னுடைய அளவுகோலில் விராட் கோலி சிறந்த கேப்டன் என்று ரவி சாஸ்திரி அவருக்கு ஆதரவாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி ஆகியோரது தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் அவர்களால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற குறை மட்டுமே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement