தோனி இல்லாததால் தான் அவங்க 2 பேரும் டீம்ல இருந்தே காணாம போய்ட்டாங்க புட்டு புட்டு வைத்த – தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா வென்று அசத்தியது. தெம்பா பவுமா தலைமையில் அனுபவம் இல்லாத இளம் வீரர்களை வைத்துக்கொண்டு உலகத்தரம் வாய்ந்த இந்தியாவை சாய்த்த தென்னாப்பிரிக்கா பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மறுபுறம் ஆரம்பத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை வெல்லும் என கருதப்பட்ட இந்திய அணி தரமான வீரர்களை அணியில் வைத்திருந்த போதிலும் மண்ணை கவ்வி படுதோல்வி அடைந்தது உள்ளது.

kohli 1

வைட்வாஷ் தோல்வி:
குறிப்பாக ஒருநாள் தொடரில் வைட்வாஷ் தோல்வி அடைந்த இந்திய அணியிடம் ஒரு போட்டியை கூட வெல்ல திறமை இல்லையா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நியாயமான கருத்தை முன்வைக்கிறார்கள்.

- Advertisement -

கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு இதே தென்னாப்பிரிக்க மண்ணில் விராட் கோலி தலைமையில் இந்தியா 5 – 1 என முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. அந்த தொடரில் பந்துவீச்சில் சுழல்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் 17 விக்கெட்களையும் சஹால் 16 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு வித்திட்டார்கள்.

IND-2

எம்எஸ் தோனி ஓய்வு:
“குல்ச்சா” என ரசிகர்களால் அழைக்கப்பட்ட அந்த கூட்டணி கடந்த 2019 உலக கோப்பையுடன் காணாமல் போய்விட்டது. தற்போது நடைபெற்று முடிந்த தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் சஹால் இடம் பெற்றிருந்தாலும் 2018 போல அவரால் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை.

- Advertisement -

இந்நிலையில் சமீப காலங்களாக இந்திய கிரிக்கெட்டில் சுழல் பந்துவீச்சு மோசமாக மாறியதற்கு முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஓய்வு பெற்றதே காரணம் என தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதுபற்றி நேற்று க்ரிக்பஸ் பக்கத்தில் அவர்,

“இந்திய அணியில் எம்எஸ் தோனி இல்லாததே அவர்களின் (குல்தீப் யாதவ் – சஹால்) பந்துவீச்சு சரிய 100% உறுதியான காரணமாகும். ஏனெனில் அவர்களுக்கு தோனி எந்த அளவுக்கு உதவினார் என நான் பலமுறை பார்த்துள்ளேன். அவர்கள் சிறப்பாக பந்து வீசிய நேரங்களில் அவர்களுக்கு எந்த உதவியும் தேவைப்படவில்லை. ஆனால் யாரேனும் ஒருவர் அவர்களை ஸ்வீப் அல்லது ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தால் அவர்கள் செய்வதறியாது தவிப்பார்கள்.

- Advertisement -

அந்த நேரங்களில் அவர் அவர்களுக்கு எப்படி பந்துவீச்சு வேண்டும் என கூறி பலமுறை உதவியுள்ளார். அதனால் அவர்களும் அவரை மிகவும் விரும்பினார்கள். தோனி கூறும் வார்த்தைகள் பொன்னானது என்பதால் அவர்கள் அப்படியே நம்பினார்கள்” என உண்மையான வார்த்தைகளை அப்படியே மறைக்காமல் கூறியுள்ளார். அவர் கூறுவது போல குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் 2017க்கு பின் இந்தியாவின் முதன்மை சுழல் பந்துவீச்சு கூட்டணியாக உருவெடுத்தது.

chahal

அந்த கால கட்டங்களில் விக்கெட் கீப்பராக இருந்த முன்னாள் கேப்டன் தோனி அவர்கள் மோசமாக பந்துவீசும் போது உடனே அவர்கள் அருகே சென்று எப்படி சரியாக பந்து வீச வேண்டும் என பலமுறை கூறியதை ரசிகர்கள் டிவியில் பார்த்திருக்க முடியும். அதனால் அவர்கள் வெற்றிகரமாக இருக்க முடிந்ததாகவும் ஆனால் தோனி 2019 உலக கோப்பைக்கு பின் ஓய்வு பெற்றதால் அவர்கள் இந்திய அணியில் இருந்து தற்போது காணாமலே போய்விட்டார்கள் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தோனி தான் கேப்டன்:
“விராட் கோலி கேப்டனாக இருந்தாலும் கூட அவர்கள் எம் எஸ் தோனியின் பேச்சைக்கேட்டே பந்து வீசினார்கள். எப்படி பீல்ட் செட் செய்வது, எந்த லைனில் பந்து வீசுவது, எதிரணி பேட்ஸ்மேன்கள் என்ன நினைப்பார்கள் ஆகிய 3 சிந்தனைகள் அவர்களின் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த அனைத்து கேள்விகளுக்கும் அவர்களுக்கு எம்எஸ் தோனி மிகச்சிறந்த பதில்களை கொடுத்தார். தோனி அவர்களை சிறந்த வழியில் வழிநடத்தினார்”

இதையும் படிங்க : இவரை மாதிரி ஒரு பிளேயர வாங்க யாருக்கு தான் மனசு வராது. ஐ.பி.எல் ஏலத்துல இவர்தான் டாப் – ராகுல் பேட்டி

என இது பற்றி மேலும் கூறியுள்ள தினேஷ் கார்த்திக் குல்தீப் – சஹால் மட்டுமல்லாது இந்தியாவுக்காக ரவீந்திர ஜடேஜா பந்து வீசும்போது தடுமாறுவதாகவும் ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடும் போது சிறப்பாக பந்து வீச தோனி தான் காரணம் என கூறியுள்ளார். அத்துடன் இம்ரான் தாஹிர், மிட்சேல் சான்ட்னர் போன்ற வெளிநாட்டு வீரர்களும் சென்னை அணியில் சிறப்பாக பந்துவீச தோனி தான் காரணம் என உண்மையை உடைத்துப் பேசியுள்ளார்.

Advertisement