அஷ்வின் இந்த மாதிரி பிரச்சனை பண்றது புதிதல்ல. மோர்கன் பண்ணது கரெக்ட் – ஷேன் வார்ன் அதிரடி

Warne
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 41-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் ஷார்ஜா மைதானத்தில் மோதின. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 19-வது ஓவரில் அஸ்வின் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இரண்டாவது ரன்க்கு ஓடினர். பீல்டர் த்ரோ செய்த பந்து பேட்ஸ்மென் மீது பட்டு விலகி சென்றால் ரன் ஓடக் கூடாது என்பது எழுதப்படாத ஒரு மரபு கிரிக்கெட் விளையாட்டில் உள்ளது. ஆனால் அஷ்வின் ரிஷப் பண்ட்டை 2-வது ரன்னிற்கு அழைத்து அந்த ரன்னை ஓடி முடித்தார்.

ashwin

- Advertisement -

அதற்குப் பின்னர் 20-வது ஓவரின் முதல் பந்தில் அஷ்வின் டிம் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது டிம் சவுத்தி அஷ்வினை நோக்கி சில வார்த்தைகளை உதிர்த்தார். உடனே அவர்கள் இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றியது. அதன்பின்னர் இயான் மோர்கன் அதில் நுழைந்து அஷ்வினுடன் கடுமையான வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார்.

ஆனால் அங்கு என்ன நடந்தது ? என்பது தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் இணையத்தில் அதிகளவு பேசப்படும் பொருளாக மாறியது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் வார்ன் கூறுகையில் : அஸ்வின் இதுபோன்று கான்ட்ரவர்சியில் சிக்குவது முதல் முறை கிடையாது.

morgan

ஏற்கனவே 2019ஆம் ஆண்டு பட்லரை மான்கட் மூலம் அவுட் செய்து கான்ட்ரவர்சி செய்தார். அதன் பின்னர் தற்போது இந்த விடயம் இதெல்லாம் தேவையில்லாத ஒன்று என்று கூறினார். அது மட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் அஷ்வின் குறித்து ஒரு கருத்தினை பதிவிட்டுள்ள ஷேன் வான் குறிப்பிடுகையில் : இந்த உலகம் இந்த டாபிக் மற்றும் அஸ்வின் ஆகியோரால் பிரியக் கூடாது.

ஏன் அஸ்வின் இதுபோன்று மீண்டும் மீண்டும் செய்கிறார் ? என்பது புரியவில்லை. இயான் மோர்கன் அவரை கடிந்தது சரிதான் என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அஷ்வின் செய்த இந்த செயல் அவரது வரம்பு மீறி இருந்ததாகவும் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement