டி20 உலககோப்பை : இந்த 2 டீம்ல ஒரு டீம் தான் கண்டிப்பா சாம்பியன் ஆகும் – ஷேன் வாட்சன் கணிப்பு

Watson-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இம்மாதம் 16-ஆம் தேதி துவங்கும் டி20 உலக கோப்பை தொடரானது அடுத்த மாதம் நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் தற்போது தங்களது 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை அறிவித்த பின்னர் இந்த டி20 தொடர் குறித்த பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளன. அதிலும் குறிப்பாக முன்னாள் வீரர்கள் பலரும் இந்த டி20 உலக கோப்பை தொடர் குறித்த பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ICC T20 World Cup

- Advertisement -

குறிப்பாக இத்தொடரில் சிறப்பாக செயல்படப்போகும் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், மேட்ச் வின்னர்கள் யார்? யார்? என பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரினை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணி எது என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணிகளாக அவர் இரண்டு அணிகளை குறிப்பிட்டு பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : சமீபத்தில் ஆஸ்திரேலியா அணியை சொந்த மண்ணில் சந்தித்த இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய மண்ணிலும் அவர்களால் ஆதிக்கத்தை செலுத்த முடியும் என்று நினைக்கிறேன்.

INDvsAUS

என்னை பொறுத்தவரை கோப்பையை வெல்லும் வாய்ப்புகளில் இந்திய அணி முதன்மையானது. அதேபோன்று மற்றொரு அணியாக ஆஸ்திரேலிய அணிக்கும் சாம்பியன் பட்டத்தை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. ஏனெனில் நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் ஆஸ்திரேலியா சொந்த மண்ணிலேயே இந்த தொடரில் விளையாட உள்ளதால் அவர்களுக்கு கூடுதல் பலம் சேரும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி டி20 போட்டிகளில் அசுர பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. என்னை பொருத்தவரை ஆஸ்திரேலிய மைதானங்களில் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு கூடுதல் சாதகம் இருக்கும் என்பதனால் ஆஸ்திரேலியா அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது. என்னை பொறுத்தவரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளில் ஒன்று தான் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ஷேன் வாட்சன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : அச்சுறுத்த காத்திருக்கும் மழை, 2வது டி20 நடைபெறும் கெளகாத்தி மைதானம் எப்படி, பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

என்ன தான் ஷேன் வாட்சன் இப்படி கூறியிருந்தாலும் இம்முறை பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து, இலங்கை போன்ற அணிகளும் பலமாக இந்த உலகக் கோப்பை தொடருக்கு தயாராகி வருவதால் நிச்சயம் இந்த டி20 தொடரானது சுவாரஸ்யமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement