மோட்டார் பைக் விபத்தில் சிக்கி 15 மீட்டர் ரோட்டில் இழுத்துச்செல்லப்பட்ட ஆஸ்திரேலிய பிரபல வீரர் – விவரம் இதோ

Bike
Advertisement

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான டிம் பெயின் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட பாலியல் குற்றத்தில் சிக்கியதன் காரணமாக அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தனது கேப்டன் பதவியை துறந்தார். அவரது இந்தப் பதவி விலகல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேச்சு பொருளாக மாறிய வேளையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரபல வீரரான ஷேன் வார்ன் மோட்டார் பைக் விபத்தில் சிக்கி உள்ளது தற்போது இணையத்தில் பெரிதளவு பேசப்பட்டு வருகிறது.

Warne 1

52 வயதான ஷேன் வார்ன் ஆஸ்திரேலிய அணிக்காக 1992 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் 145 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 1001 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் தனது மகன் ஜேக்சனுடன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 15 மீட்டர் வழுக்கிக் கொண்டே சென்று உள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும் இதில் அவருக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் கடுமையான வலியுடன் கூடிய புண்கள் உடம்பில் இருப்பதாகவும் இந்த விபத்துக்கு பிறகு ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.

Warne

வரும் டிசம்பர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய மண்ணில் துவங்க உள்ள ஆஷஸ் தொடருக்கு வர்ணனையாளராக பணியாற்ற இருந்த வேளையில் தற்போது அவருக்கு இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : ரிவியூ எடுக்க தாமதமானதால் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து ஓப்பனர் – என்ன நடந்தது ?

இதனால் திட்டமிட்டபடி அவரால் ஆஷஸ் தொடரில் வர்ணனை செய்ய முடியுமா? என்பது தெரியவில்லை. இருப்பினும் அவர் நிச்சயம் ஒரு சில போட்டிகளை தவற விட்டாலும் இந்த தொடரில் வர்ணனை செய்வார் என்று எதிர்பார்க்கப் படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement