20 ஓவர் கிரிக்கெட் வந்ததிலிருந்து கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம். தற்போதைய டி20 போட்டிகள் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக் சாதகமாக மாறிவிட்டது. மேலும் டி20 போட்டிகளில் வெறும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் மட்டுமே நிலவுகிறது. ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டியில் மட்டும் இருந்தபோது இரண்டிற்கும் உள்ள சம நிலை நீடித்துக் கொண்டிருந்தது
ஒருநாள் பந்துவீச்சாளர்கள் 10 விக்கெட் எடுத்தால் அடுத்த நாள் பேட்ஸ்மேன்கள் 300 ரன்கள் அடிப்பார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் எப்போதும் சிக்ஸர்கள் மட்டுமே பறந்துகொண்டிருக்கிறது பந்துவீச்சாளர்களுக்கு இடமில்லை.
அதேபோல் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான விதிகள்தான் தற்போது வரை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டி20 கிரிக்கெட் போட்டியை மேம்படுத்தவும் பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கு மிடையே உள்ள சமநிலையை கொண்டு வரவும் 3 புதிய விதிகளை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான வார்னே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரியின் தூரம் மிகவும் அதிகமாக இருக்க வேண்டும் சாதாரணமாக 60 முதல் 70 மீட்டர் தான் இருக்கிறது. எனவே இனிவரும் போட்டிகளில் பவுண்டரியின் எல்லைகள் குறைந்தது 85 மீட்டர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் பேட்ஸ்மேனுக்கும் பவுலருக்கும் சரியான போட்டி நிலவும்.
அதே போல் சிறிய மைதானமாக இருந்துவிட்டால் அந்த மைதானத்தில் புற்கள் அதிகமாக இருக்க வேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு உதவும் அதே நேரத்தில் ஒரு பந்து வீச்சாளர் 4 ஓவர்கள் வீச வேண்டும் என்ற நிலை மாற்றப்பட்டு ஒரு பந்து வீச்சாளர்களுக்கு 5 ஓவர் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஷேன் வார்னே.