ஷேன் வார்ன் திடீர் மாரடைப்பிற்கு பின்னால் இந்த பிரச்சனை தான் காரணமா? – அவரே வெளியிட்ட பதிவு

Warne-1
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்ன்னின் இழப்பு நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவருக்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள், ஆஸ்திரேலிய மக்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் ஜாம்பவான்கள், அவருடன் பயணித்த மற்றும் அவருடன் விளையாடிய வீரர்கள் என அனைத்து தரப்பினரும் அவரது இறங்களுக்கு தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சீமான் ஷேன் வார்ன் உடனான தங்களது பிணைப்பு குறித்தும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் வார்னின் இந்த திடீர் இறப்பிற்கு பின்னால் உள்ள ஒரு காரணம் தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி கூடுதல் உடல் எடையுடன் இருந்த அவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் அதாவது பிப்ரவரி 28-ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள ஒரு டீவீட்டில் “Operation Shred” ஆரம்பித்துவிட்டது.

- Advertisement -

நான் அதனை துவங்கி 10 நாட்கள் ஆகிறது. என்னுடைய இலக்கு அடுத்த ஜூலை மாதத்திற்குள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு மிகவும் பிட்டாக இருந்தேனோ அதே போன்று மீண்டும் திரும்பி வருவேன் என்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதேபோன்று இந்த உடல் எடை குறைப்பிற்கான முயற்சிக்கு அவர் தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் தங்கி உடற்பயிற்சிகளை செய்து வந்துள்ளார். இப்படி அவர் உடல் எடையை குறைக்க ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள் தற்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளதால் அவரது உடல் எடை குறைப்பிற்காக அவர் செய்த உடற்பயிற்சிகள் தான் இந்த திடீர் மரணத்திற்கு காரணமா என்பது போல ஒரு தகவல் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஆனாலும் அவரின் உடலை பரிசோதித்த மருத்துவ குழுவானது அவருக்கு அதிக உடற்பயிற்சிகள் காரணமாக எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் மேலும் அவர் உடல் எடையை குறைக்கும் எந்த செயலிலும் அவருக்கு இந்த இழப்பு ஏற்படவில்லை என்றும் உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க : பிசிசிஐ அடிப்படை விதிமுறையை மீறிய சௌரவ் கங்குலி! போட்டாவால் வந்த பிரச்சனை – என்ன நடந்தது?

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உயிரிழந்ததாகவும் மருத்துவ அறிக்கைகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 52 வயதான ஷேன் வார்ன்னின் இந்த திடீர் மறைவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement