பிசிசிஐ அடிப்படை விதிமுறையை மீறிய சௌரவ் கங்குலி! போட்டாவால் வந்த பிரச்சனை – என்ன நடந்தது?

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசிஐ இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெறும் அனைத்து விதமான முக்கிய கிரிக்கெட் போட்டிகளையும் கட்டுக்கோப்பாக நடத்தும் ஒரு அமைப்பாகும். இப்படிப்பட்ட இந்த அமைப்புக்கு கடந்து 2019ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு தலைவராக செய்யப்பட்டார்.

அவர் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றதால் இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். ஏனெனில் கடந்த 2000ஆம் ஆண்டு சூதாட்ட சர்ச்சை புகாரில் சிக்கி தவித்த இந்தியாவிற்கு கேப்டனாக பொறுப்பேற்ற அவர் அதிரடியான மாற்றங்களை செய்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து இன்றைய தரமான இந்திய அணியை உருவாக்க அப்போதே விதை போட்டார்.

- Advertisement -

பிசிசிஐ தலைவராக அசத்திய கங்குலி:
அப்படிப்பட்ட ஒரு தலைமை பண்பு நிறைந்த அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தலைவராக பொறுப்பேற்றுள்ளதால் இந்திய கிரிக்கெட் புதிய வளர்ச்சி அடையும் என பலரும் எதிர்பார்த்தார்கள். அதன்பின் எதிர்பார்த்தது போலவே பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற சவுரவ் கங்குலி பல அதிரடியான மாற்றங்களை செய்தார்.

குறிப்பாக பொறுப்பேற்ற உடனேயே பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு தேவையான நடவடிக்கையை அவர் எடுத்தார். அதன் பயனாக கடந்த 2019 அக்டோபர் மாதம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா தனது பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடியது. தொடர்ந்து பிசிசிஐ தலைவராக சிறப்பாக செயல்படத் துவங்கிய அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு அதிரடியான சம்பள உயர்வுக்கு கையெழுத்திட்டார்.

- Advertisement -

சர்ச்சையில் கங்குலி:
இப்படி சிறப்பாக செயல்பட்டு வந்துகொண்டிருந்த அவர் இந்தியாவின் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி விஷயத்தில் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது பணிச்சுமை காரணமாக கடந்த நவம்பர் மாதம் நடந்த டி20 உலகக் கோப்பையுடன் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் பதவியில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்பினார். ஆனால் ஒரு உலக கோப்பையை வாங்கி தரவில்லை என்ற காரணத்துக்காக அவரின் ஒருநாள் கேப்டன் பதவியை பறித்ததால் மனம் உடைந்த விராட் கோலி வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்த போதிலும் கடந்த மாதம் திடீரென அந்தப் பதவியில் இருந்து விலகினார்.

அந்த சமயத்தில் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என அவரை கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு யாரும் தம்மிடம் கூறவில்லை என விராட் கோலி உண்மையை போட்டு உடைத்தார். அதன் பின் இது பற்றி கூறுவதற்கு எதுவும் இல்லை நேரம் வரும்போது பிசிசிஐ பார்த்துக் கொள்ளும் என சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். இதனால் சௌரவ் கங்குலி மற்றும் விராட் கோலி ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டது உலகிற்கு அம்பலமானது. மேலும் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து தம்மை நீக்குவது பற்றி பிசிசிஐ சரியாக தொடர்பு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் விராட் கோலி எழுப்பினார்.

- Advertisement -

விதியை மீறிய சௌரவ் கங்குலி:
அந்த வேளையில் இந்திய அணியை தேர்வு செய்யும் விஷயத்தில் சௌரவ் கங்குலி தலையிடுகிறார் என்ற புதிய சர்ச்சை ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் வலம் வந்தது. அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக கடந்த 2019ஆம் ஆண்டு சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்தபின் அப்போதைய தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் மற்றும் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருடன் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டதை சில ரசிகர்கள் சுட்டிக்காட்டினார்கள். ஆனால் அதை மறுத்த சௌரவ் கங்குலி இந்திய அணியைத் தேர்வு செய்யும் வேலைகளில் தலையிடுவதில்லை எனக் கூறி இருந்தார்.

ஆனால் “நான் தலைவராக இருக்கும்வரை இந்திய அணியில் உனக்கு நிச்சயமாக இடம் உள்ளது” என சௌரவ் கங்குலி தெரிவித்ததாக விக்கெட் கீப்பர் சஹா சமீபத்தில் கூறியிருந்தார். அப்படியானால் இந்திய வீரர்களை தேர்வு செய்வதில் அவரின் தலையீடு உள்ளது என்பது உறுதியானது. ஆனால் பிசிசிஐ அடிப்படை விதி முறைப்படி “பிசிசிஐ தலைவராக இருப்பவர் இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் வேலைகளில் முற்றிலும் தலையிடக் கூடாது” என்ற முக்கியமான விதிமுறை உள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலியை இந்தியாவுக்கு முதல் முறையாக தேர்வு செய்தது எப்படி? பின்னணியை பகிரந்த திலீப் வெங்சர்க்கார்

அதன்படி சௌரவ் கங்குலி பிசிசிஐயின் அடிப்படை விதிமுறையை மீறி உள்ளது தெரிய வருகிறது. இருப்பினும் இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு இருக்கும் மரியாதை, அதிகாரம் போன்றவற்றின் காரணமாக அவரை யாரும் கேள்வி கேட்கத் தயாராக இல்லை என்பதால் இந்த விதிமுறை மீறலை யாரும் கண்டு கொள்வதில்லை என கூறப்படுகிறது.

Advertisement