நம்பர் 1 பந்துவீச்சாளர் ஆன பும்ராவின் சொதப்பலுக்கு இதுதான் காரணம் – மும்பை பந்துவீச்சு பயிற்சியாளர் பேட்டி

Bond
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அதன்பிறகு நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இந்திய அணியை வாஷ்அவுட் செய்தது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷேன் பாண்ட் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது :

Bumrah

- Advertisement -

ஒரு பந்து வீச்சாளர்களுக்கு தகுதியான பந்துவீச்சாளருக்கு தனது பந்துவீச்சின் மீது இயற்கையான எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். இந்நிலையில் பும்ராவிற்கு எதிராக நியூசிலாந்து பிளேயர்கள் சரியாக கணித்து விளையாடி விட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். ரிஸ்க் எடுக்க வேண்டிய நேரத்தில் அவர்கள் எடுத்து அருமையாக பும்ராவை கையாண்டார்கள்.

மேலும் அனுபவமில்லாத பந்து வீச்சாளரான சைனி மற்றும் தாகூர் ஆகியோரையும் அவர்கள் சிறப்பாக எதிர்கொண்டனர். அனைத்து அணிகளும் இப்பொழுது மற்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தங்களது வியூகத்தை கற்றுக் கொண்டுதான் வருகிறார்கள். அதேபோல் பும்ராவுக்கு எதிராக நியூசிலாந்து வீரர்களின் திட்டம் சிறப்பாக இருந்தது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதால் பும்ராவின் லைன் அண்ட் லென்த் ஆகியவை அவர் நினைத்த மாதிரி இன்னும் வரவில்லை.

Bumrah-2

பிளாட்டான மைதானத்தில் பந்து வீசுவது என்பது மிகக் கடினம் என்றும் இதனால் தான் இந்த தொடர் முழுவதும் பும்ராவால் சிறப்பாக பந்துவீச முடியாமலும், விக்கெட் எடுக்காமல் போனார் என்று ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் ஷேன் பாண்ட் மும்பை அணியின் பயிற்சியாளராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement