ஐ.பி.எல் தொடரின் போதே ரோஹித் சர்மாவை ஸ்லெட்ஜிங் செய்த ட்ரென்ட் போல்ட் – ஷேன் பான்ட் ஓபன்டாக்

- Advertisement -

நாளை மறுதினம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள், இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் மோத இருக்கின்றன. இந்த போட்டியில் ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒன்றாக விளையாடும் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ட்ரெண்ட் போல்ட்டும், இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளவிருக்கின்றனர்.

boult

- Advertisement -

இந்நிலையில் தனியார் விளையாட்டு சேனல் ஒன்றிர்கு பேட்டியளித்துள்ள, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வரும் நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான ஷேன் பாண்ட் அவர்கள் இருவரையும் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த பேட்டியில் பேசிய அவர், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கான வலைப் பயிற்சியின்போது ரோஹித் சர்மாவை, ட்ரெண்ட் போல்ட் ஸ்லெட்ஜிங் செய்தார் என்ற சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டு உள்ளார். இது பற்றி கூறிய அவர், வலைப் பயிற்சியில் ட்ரென்ட் போல்ட்டின் பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா சில பந்துகளை தனது ஹெல்மட்டில் வாங்கினார். மேலும் ஸ்விங்கான பல பந்துகளை அவரால் விளையாடவே முடியவில்லை.

boult 2

அந்த சமயங்களில் எல்லாம் அவரிடம் நெருங்கி சென்ற ட்ரெண்ட் போல்ட், இதேபோல தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் நடைபெறும் என ஜாலியாக ஸ்லெட்ஜிங் செய்து கொண்டிருந்தார் என்று அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் இதற்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில், இந்த இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகிய இருவருக்கும் இடையில்தான் அதிகமான போட்டி நிலவும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

boult 1

அந்த பேட்டியில் மேலும் பேசிய ஷேன் பாண்ட், இந்த இருவருக்கும் இடையிலான போட்டியின்போது இருவரின் முகத்திலும் ஏற்படும் சிரிப்பை காண நான் ஆவலாக இருக்கிறேன் என்றும் கூறினார்.
இந்த இறுதிப் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்திய நேரப்படி இந்த போட்டியானது 3.30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement