மும்பை அணியின் மிகச்சிறந்த வீரராக இவர் நிச்சயம் மாறுவார். எங்க பவுலிங் ஸ்ட்ரென்த் இவர்தான் – ஷேன் பாண்ட் பேட்டி

bond
- Advertisement -

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ஹைதராபாத் அணி மோதிக் கொண்டனர். முதலில் பேட்டிங் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 150 ரன்கள் குவித்தது. குண்டன் டீ காக் (40)ரோகித் சர்மா(32) மற்றும் பொல்லார்ட் (35) ஆகியோரின் துணை கொண்டு மும்பை அணியால் 20 ஓவர் முடிவில் 150 ரன்கள் குவிக்க முடிந்தது. அதன் பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி இறுதியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை பெற்றது. முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்பின் பந்து வீச்சாளர் ராகுல் சஹரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்த தோல்வியை தோல்வியை அடைந்தது.

pollard

- Advertisement -

இந்நிலையில் ராகுலின் பந்துவீச்சை பற்றி பேசிய பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட், இதற்கு முந்தைய போட்டிகள் கொல்கத்தா அணியுடன் இதையே தான் அவர் செய்தார். அணி இக்கட்டான நேரத்தில் இருந்த வேளையில் மிக சிறப்பாக 4 ஓவர்களை வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரின் துணை கொண்டு நாங்கள் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தினோம்.

அதேபோல நேற்றைய போட்டியில் மும்பை அணி ஒரு கட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்தது அப்பொழுது ராகுல் பந்துவீச்சு மும்பை அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றது. நான் ஓவர்களை சிறப்பாக வீசி வெறும் 19 ரன்களை மட்டும் தான் அவர் கொடுத்தார். மேலும் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுத்தார்.

chahar

மேலும் பேசிய அவர் : அவருடைய வேலை சிறப்பாக பந்துவீசி விக்கெட் எடுப்பது தான். மும்பை அணியின் மற்ற பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக பந்து வீசி நெருக்கடிக்கு உள்ளாகும் பட்சத்தில், ராகுல் சஹர் வந்து சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும். அதை அவர் மிகச் சிறப்பாக செய்து வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் தன்னை நிறுத்திக் கொண்டு வருகிறார் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் எப்பொழுதும் எங்கள் அணியில் ஒரு நம்பிக்கை மிகுந்த வீரராக இருப்பார் என்றும் கூறி முடித்தார்.

Chahar 1

நேற்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, மொத்தமாக அவர் தற்போது 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் காரணமாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் பெங்களூரு அணியின் ஹர்ஷல் பட்டேல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement