- Advertisement -

சாக்கு சொல்லல.. விதி விளையாடிடுச்சு.. வரலாற்று தோல்விக்கு அந்த 2 விஷயம் காரணம்.. பாக் கேப்டன் வருத்தம்

வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ராவில்பிண்டி நகரில் ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 448-6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஆனால் அடுத்ததாக களமிறங்கிய வங்கதேசம் அபாரமாக விளையாடி 565 ரன்கள் குவித்து பாகிஸ்தானுக்கு எதிராக தங்களது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

அத்துடன் 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தானை வெறும் 146 ரன்களுக்கு சுருட்டிய வங்கதேசம் கடைசியில் 30 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி தொட்டது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று வங்கதேசம் வரலாறு படைத்தது. மறுபுறம் வங்கதேசத்துக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை (143) பதிவு செய்த பாகிஸ்தான் முதல் முறையாக அவமானத் தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

தோல்விக்கான காரணம்:

இந்நிலையில் ராவில்பிண்டி பிட்ச் வேகத்துக்கு சாதகமாக என்று நினைத்து இப்போட்டியில் முழுநேர ஸ்பின்னர்களை தேர்ந்தெடுக்கவில்லை என பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். மேலும் விதி விளையாடியது போல் 8 – 9 நாட்கள் முன்பாகவே மழை பெய்ததால் பிட்ச் தாங்கள் நினைத்தது போல் அமையாததே தோல்விக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“எப்போதும் சாக்கு சொல்லவில்லை. பிட்ச் நாங்கள் நினைத்தது போல் விளையாடவில்லை. மேலும் ராவில்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத் நகரில் வானிலை வேறு மாதிரி இருந்தது. முதல் நாள் துவங்குவதற்கு 8 – 9 நாட்கள் முன்பிலிருந்தே மழை பெய்தது. பிட்ச் கொஞ்சம் அதிகமாக வேலை செய்யும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். 3 பந்து வீச்சாளர்களால் நாங்கள் வரைமுறையை தொட்டோம்”

- Advertisement -

எதிராக விளையாடிய பிட்ச்:

“நாளின் இறுதியில் அதில் நாங்கள் தவறாக செய்தோம். போட்டியை முன்னோக்கி நகர்த்துவதற்காக முன்கூட்டியே டிக்ளேர் செய்தோம். பவுலிங் மற்றும் ஃபீல்டிங் ஆகியவற்றில் நாங்கள் இன்னும் சிறப்பாக செய்திருக்க வேண்டும். ட்ராவுக்காக நீங்கள் விளையாடும் போது அழுத்தத்தின் கீழ் வேடிக்கையான விஷயங்கள் நடக்கும். இப்போட்டியில் செய்த தவறுகளால் அடுத்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்”

இதையும் படிங்க: 146க்கு ஆல் அவுட்.. பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஓடவிட்ட வங்கதேசம்.. 24 வருட சரித்திர உலக சாதனை வெற்றி

“ஸ்பின்னருக்கு எப்போதும் அறைக்குள் இடம் இருக்கும். பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் அசத்திய அமீர் ஜமாலை நாங்கள் இழந்தோம். சிட்னியில் சஜித் கான் அசத்தினார். அதை வைத்து இப்போட்டியில் 4 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுத்தது வேலை செய்யவில்லை. எங்களுடைய சொந்த மண்ணில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பெரிய பாடம் கிடைத்துள்ளது. எனவே இதே சூழ்நிலையில் அதே பழைய தவறை மீண்டும் நாங்கள் செய்யக்கூடாது என்பதே முக்கியமானதாகும்” என்று கூறினார்.

- Advertisement -