விராட் கோலியை விட அவர் சிறந்த ரெகார்ட்டை வெச்சுருக்கும் ஆதாரம் போதுமா.. பாக் கேப்டன் பதிலடி

Shan Masood
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்பே, ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக தோற்றது. அந்த வரிசையில் 2024 டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டி அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. அதன் உச்சமாக சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் முதல் முறையாக பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது.

அந்த தோல்விக்கு பாபர் அசாம், கேப்டன் ஷான் மசூத் போன்ற பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. அந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் பாகிஸ்தானின் தோல்வி பற்றி செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.

- Advertisement -

விராட் கோலியை விட பெஸ்ட்:

அப்போது அப்துல்லா ஷபிக் அல்லது சாய்ம் ஆயுப் போன்ற தொடர்ந்து அசத்தாத பேட்ஸ்மேன்களுக்கு நாம் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பது ஏன்? என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு தன்னுடைய 19 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்தியாவின் விராட் கோலியை விட அப்துல்லா சபிக் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த ரெக்கார்டை வைத்திருப்பதாக ஷான் மசூத் பதிலளித்தார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உங்களுடைய கேள்வி துல்லியமாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. 2024இல் பாகிஸ்தான் நன்றாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் ஆதரவளிக்கும் ஒரு வீரர் பாகிஸ்தானின் நல்ல வேலையாளாக உருவாகி அவரால் என்னுடைய இடம் பறி போனால் அதற்காக நான் கவலைப்பட மாட்டேன். நீங்கள் வெறும் புள்ளிவிபரங்களை மட்டும் பார்த்து விட்டு பேசுகிறீர்கள்”

- Advertisement -

உண்மை என்னை:

“அது போன்ற சூழ்நிலையில் 19 டெஸ்ட் போட்டிகளின் விளையாடியுள்ள அப்துல்லா ஷபிக் ரெக்கார்ட் விராட் கோலியை விட சிறப்பாக இருக்கிறது” என்று பதிலடி கொடுத்தார். அவருடைய இந்த கருத்தை பார்க்கும் இந்திய ரசிகர்கள் யாரை யாருடன் ஒப்பிடுகிறீர்கள்? என்று சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். உண்மையில் விராட் கோலி தனது முதல் 19 டெஸ்ட் போட்டிகளில் 32 இன்னிங்ஸில் 4 சதம் 6 அரை சதம் உட்பட 1178 ரன்களை 40.62 என்ற சராசரியில் எடுத்தார்.

இதையும் படிங்க: இம்முறை 2 – 2.. இங்கிலாந்துக்கு வலியை கொடுத்த விராட் கோலிக்கு அதுவே கடைசி டூரா இருக்கும்.. ஸ்டுவர்ட் ப்ராட்

மறுபுறம் அப்துல்லா சபிக் இதுவரை விளையாடிய 19 போட்டிகளில் 36 இன்னிங்ஸில் 4 சதம் 5 அரை சதங்கள் உட்பட 1372 ரன்களை எடுத்துள்ளார். இருப்பினும் அவருடைய 40.35 என்ற சராசரி விராட் கோலியை (40.62) விட கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement