இவர் ஒருவர் போதும் பகலிரவு டெஸ்ட்டில் கலக்குவார். இவரே துருப்புச்சீட்டு – கோலியின் நம்பிக்கை

Kohli
- Advertisement -

இந்திய அணி வங்கதேச அணியுடன் விளையாடப் போகும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுவதால் அதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் அந்த போட்டியில் இருக்கும் பிரச்சனைகளும் இப்போது பேசப்படும் விடயமாக உள்ளது. ஏனெனில் இந்திய அணி பிங்க் பந்தில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். அதே போன்று பகலிரவு போட்டியில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது இதுவே முதல் முறை.

ind

- Advertisement -

வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிகப்பு நிற பந்துகள் பதிலாக தற்போது பிங்க் நிற பந்துகள் பயன்படுத்த உள்ளதால் அதனை கணிப்பது சற்று கடினம். மேலும் சாதாரண பந்தில் இருப்பதாய் காட்டிலும் கூடுதல் வேகமும், ஸ்விங்கும் அதிகளவு உள்ளதால் பயிற்சியின் போதே இந்திய வீரர்கள் தடுமாறினார். இதனால் நிச்சயம் பந்துவீச்சு இரு அணிகளுமே சரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் பிங்க் பந்தினை வைத்து தொடர்ந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் சற்று சுமாராக தான் செயல்படுவார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில் பிங்க் பந்தினை பிடித்து பந்து வீசுவது என்று சற்று கடினமான விடயமாக இருக்கும் என்றும் மேலும் பனிபொழிவின் போது பந்து மேலும் வழுக்கும் என்பதால் பந்துவீச்சாளர்களுக்கு சவால் காத்திருக்கிறது.

ind 1

வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள் அவர்களுக்கு இந்த பிட்ச் ஒத்துழைக்கும் என்றும் மேலும் 40 ஓவர்கள் வரை பிங்க் பந்தில் ஸ்விங் குறையாமல் இருக்கும் என்பதால் ரிவர்ஸ் ஸ்விங் வீசும் வீரருக்கு இது பிளஸ் ஆக அமையும். எனவே இந்த போட்டியில் இந்திய அணி வீரர் கேப்டனான கோலி வேகப்பந்து வீச்சாளர் ஷமியை அதிகம் உபயோகிப்பார் என்று தெரிகிறது. ஏனெனில் கொல்கத்தா அவருடைய சொந்த மைதானம் அதில் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் அதனை தவிர்த்து பார்க்கும் போதும் தற்போது ஷமி தொடர்ந்து சிறப்பாக வீசிவருகிறார்.

shami

ஷமி நான்காவது இன்னிங்சில் ஆடுகளம் மட்டமாக இருந்தாலும் சரி தொடர்ந்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவதில் வல்லவராக இருக்கிறார். இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு முக்கிய துருப்பு சீட்டாக ஷமியே இருப்பார். மேலும் அவரையே முக்கிய வீரராக கோலியும் பயன்படுத்துவார் என்று தெரிகிறது எனவே இந்த போட்டியை பொறுத்தவரை ஷமியை பெரிதும் நம்பியுள்ளார் கோலி என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement